லியோ கிலிம்ப்ஸ் எபெக்ட் போல.. விக்னேஷ் சிவனை தூக்கிய அஜித்.. புது இயக்குனர் லோடிங். முழு விவரம்.
சமூக வலைத்தளங்களில் கொஞ்ச நாளாகவே வந்துட்டு இருந்த வதந்தி என்னவென்றால் அஜித் படத்தின் அடுத்த இயக்குனர் யாரென்று. முன்னாடி லைக்கா நிறுவனம் தான் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது, விக்னேஷ் தான் இயக்குனர் என்று அட்வான்சும் கொடுக்கப்பட்டது. இப்போது திடீரென்று அதில் ஒரு மாற்றம்.
இப்போது அஜித் படத்தின் இயக்குனர் கலகத்தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அல்லது அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தன் என்று சொல்லப்படுகிறது. கொஞ்ச நாட்களாக போய்க்கொண்டிருந்த வதந்தி இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டர் பயோவில் இயக்குனர் #AK62 என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அதிக நீக்கி விக்கி 6 என்று மாற்றியுள்ளார். கவர் போட்டோ கூட அஜித் போட்டோ தான் முன்னாடி போட்டிருந்தார். இப்போது அதையும் மாற்றி அஜித் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இது கண்டிப்பா விக்னேஷ் சிவனுக்கு கஷ்டமாக இருந்திருக்கும், அடடா அறிவிப்பு எல்லாம் வந்தவுடன் இப்படி ஆயிடுச்சே என்று. பாவமா தான் இருக்குது.
அஜித், தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிப்பா விக்னேஷ் சிவனின் சினிமா வாழ்க்கைக்கு பின்னடைவா இருக்கும். இப்போது விஜய் படத்தின் அப்டேட் வந்து அது தான் ட்ரெண்டிங்கில் போயிட்டு இருக்கு, அதனால் கண்டிப்பா இந்த சூடு தணிந்தவுடன் அஜித் 62 படத்தின் இயக்குனர் யாரென்று அதிகாரபூர்வ அறிவு வருமாம். அதற்கு வைட்டிங்.