அலை கடல் பாடலை பார்க்க அலைகடலாக திரண்டு வந்திருக்கும்.. செம்ம ஹாட் ஐஸ்வர்யா லட்சுமி. வீடியோ வைரல்.
கல்கியின் வரிகள்:அலைக்கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவது மேன் நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன். இசை அழகா பாடல் வரிகள் அழகா இல்ல காட்சி அமைப்பு அழகா? மொத்தத்தில் எல்லாம் அழகு. கடலின் அழகையும் இந்த பாடலின் வரிகளும் குரலின் அழகையும் கேட்டு நான் மெய் மறந்த ரசிகர்கள் பலர்.
மென்சோக மனஉணர்வில் பெண் ஏக்கம் கடலலையாய் ததும்பும் நல்லிசையை செவி ஊற்றி இதயம் நிறைத்த ரஹ்மான் அவர்களின் மெல்லிசை பட்டியலில் காலத்திற்கும் நிலைத்திருக்கும்..
நன்றி பல ரஹ்மானே.. இவ்வியசைக்கு.. செவ்விசைக்கு..!!
உங்களுக்காக இந்த பாடலின் வரிகளை கொண்டு வந்துள்ளோம்: பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ..ஆஆ…
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ
பெண் : பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ
பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள ஏலோ ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ
பெண் : இன்பம் துன்பம் ரெண்டும் இடம் பொருள் மாறும் இரவுகள் பகல் ஆகும் முகில் மழை ஆகும் முறுவலும் நீர் ஆகும்
பெண் : வான் எங்கும் சாயாத செஞ்சூரியன் வரதோ அருங்காலையில் நம் பூமியில்
பெண் : நான் ஒரு முறை வாழ்ந்திட மறு கரை ஏறிட பல பல பிறவிகள் கொள்வேனோ சொல்லிடு
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ
பெண் : பேசாத மொழி ஒன்றில் காவியமா தானாக உருவான ஓவியமா தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத காதலா
பெண் : கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ
பெண் : அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ
பெண் : பாத மாறும் மேகம் எங்கோ தொலைந்தவள் தானோ வானும் நீரும் சேரும் என்றோ ஓர் நாள் தானோ
பெண் : ஆழியிலே தடு மெதுவு எள்ள ஏலோ ஏலேலோ வான் வெளியின் மின் ஒளியில் செல்ல ஏலோ ஏலேலோ..
மனதை இதமாக்கும்.. மடிதனில் சுகமாக்கும்.. இதயத்தை இடம் மாற்றும். இளமையையும் தடம் மாற்றும் அத்தனை சக்தி இருக்கு இந்த இசையிலே. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பிடித்தது என்றால் அது இந்த படம் தான். அதுவும் இந்த பாடலில் பாடலும் பூங்குழலியின் அழகும் சேர்ந்து திரையரங்கில் ஆளே மயக்கிடுச்சு. திரையில் ஒரு நிமிடத்தில் பாடல் முடிந்தது வருத்தத்தை அளித்தது.. ஆனால் இப்போது 🤩
Video: