காதல் மனைவிக்கு பிறந்தநாள்.. ஒரே ரொமான்ஸ் மூட் தான் அல்லு அர்ஜுன்க்கு. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
தெலுங்கு சினிமாவிலிருந்து இப்போ நிறைய ஸ்டார்ஸ் அப்படியே பான் இந்தியா ஸ்டார்ஸா வளர்ந்து வர்ராங்க. அதில் முக்கியமான நடிகர் அல்லு அர்ஜுன். இவர் எப்போ புஷ்பா அப்டின்னு ஒரு படம் நடிச்சாரோ, அது இவ்வளவு பெரிய ஹிட் அடிக்கும் அப்டின்னு எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க. ரொம்ப எளிமையான கதை, ஆனால் ஸ்டோரி டெல்லிங் அப்டின்னு ஒரு விஷயம் இருக்குல்ல. அதில் இயக்குனர் சுகுமார் பிரிச்சு மேஞ்சுட்டார். போர் அடிக்காம ஒரு 3 மணி நேரம் நீ கதையை சொல்லி முடிக்கரையா அந்த படம் ஹிட்டுயா. அது இந்த படத்தில் நல்லாவே ஒர்கவுட் ஆகி இருக்கு.
இவரோட அடுத்த படமான புஷ்பா 2 படத்தின் வேலைகள் நடந்து வருவதாக தயாரித்து நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஏன் ஈவளவு டிலே என்றால் ஸ்கிரிப்ட் ஒர்க் எல்லா மக்களையும் satisfy பண்ணனும் என்று மெனக்கெட்டு பல ரெவிசன்ஸ் போயிட்டு இருக்கு. அதனால் தான் சுட டிலே. அதனால் இருக்கும் கொஞ்ச நேரத்தில் கூடுவதுடன் இருப்பது, நேரத்தை அவர்களுடன் செலவிடுவது என்று ஜாலியாக இருக்கிறார் அல்லு அர்ஜுன்.
ஒரு சில நாட்களுக்கு முன் தான் அவரோட மனைவி அல்லு சினேகா ரெட்டிக்கு பிறந்தநாள் வந்துச்சு. காதல் மனைவியின் பிறந்தநாளுக்கு கணவன் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, முதலாவதாக குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். பின்னர் அந்த புகைப்படத்தை பதிவிட்டு, ‘ஹாப்பி பர்த்டே க்யூட்டி’ என்று பதிவு செய்துள்ளார். மூன்றே வார்த்தைகள் தான், அதில் அவ்வளவு ரொமான்ஸ். மனைவியை எவ்வளவு லவ் செய்கிறார் என்று கூறிவிட்டார்.
பின்னர் குடும்பத்துடன் அம்ரிஸ்டர் கோல்டன் டெம்பிள்க்கு சென்று அங்கு தெய்வத்தை வழிபட்டார். பின்னர் அங்கு பல இடங்களை குடும்பத்துடன் சுற்றி பார்த்தார். அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. சீக்கிரம் அந்த புஷ்பா 2 படத்தை ஆரம்பிங்கனே. வைட்டிங்லேயே வெறி ஏறுது.