செம்ம அழகுல ரெண்டு பேரும்.. செம்ம ரொமான்ஸ் மூடில் மனைவியுடன் அல்லு அர்ஜுன். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Allua rjun with his wife

புஷ்பா 2 படத்தை ஆரம்பிப்பதற்கு முன் ஜாலியா பேமிலி கூட டைம் செய்ன்ட் பண்ணலன்னு ஊர் சுத்திட்டு இருக்காரு நம்ம ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன். சமீபத்தில் அவரோட பேமிலி பிராண்ட் திருமணம் சவுத் ஆப்ரிக்காவில் நடந்தது, அங்கு குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தார் ஸ்டைலிஷ் ஸ்டார். இன்னும் அந்த புஷ்பா பட கெட்டப்பில் தான் இருக்காரு. இன்னும் கொஞ்ச நாளில் ஷூட் ஆரம்பித்து விடும்.

தெலுங்கு சினிமாவின் அழகான கபிள்ஸ் என்றால் அல்லு அர்ஜுனையும் , சினேகா ரெட்டியையும் சொல்லலாம். பார்ப்பதற்கு இரண்டு பேருமே சூப்பரா இருப்பாங்க. அல்லு அர்ஜுன் சமூக வலைத்தளங்களில் அவ்வளவு ஆக்ட்டிவ் இல்லை. ஆனால் அவங்க மனைவியில் இன்ஸ்டா மூலம் இந்த புகைப்படங்கள் எல்லாம் நமக்கு கிடைத்திருக்கின்றன. சினிம சினிமா என்று இருக்கும் இவருக்கு இது போன்ற பிரேக் ரொம்ப அவசியம், ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் அடுத்த படமும் அதேபோல் இருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அவர்கள் படும் பாடு இருக்கே.

Allua rjun with his wife

தற்போது நமக்கு கிடைத்த தகவல்படி புஷ்பா 2 படத்தின் டீசர் டிசம்பர் மாதம் வெளியாகும் அவதார் 2 படத்தின் இன்டெர்வல் காட்சியில் ஒளிபரப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல். டீசர் விடுகிறார்கள் என்றால் அப்போது படத்தின் ஷூட்டிங் ஏறத்தாழ முடிந்திருக்கும் போலயே. நம்ம கெஸ் சரியாக இருந்தால் முடிந்திருக்கும், ஏனென்றால் படத்தின் முக்கியமான வில்லனான பகாத் அந்த படத்தில் மொட்டை அடித்து நடித்திருந்தார், இப்போது அவர் அந்த கெட்டப்பில் இல்லை, அதனால் முடிந்திருக்கும் என்றே நினைக்க தோன்றுகிறது.

போன வருடம் டிசம்பர் மாதம் தான் புஷ்பா படம் ரிலீஸ் அனைத்து என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவு ப்ரோமோஷன் செய்யாமலே படம் பான் இந்தியா படமாக மாறியது. கண்டிப்பாக பாகம் 2க்கு எல்லாம் வேற லெவெலில் எதிர்பார்ப்பு இருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் தெலுங்கு சினிமாவிற்கு இன்னொரு 1000 கோடி வசூல் காத்திருக்கிறது.

Latest Photos:

Related Posts

View all