தேவதை அவள் ஒரு தேவதை! எந்த அவுட்பிட்டாக இருந்தாலும் சரி அம்சமாக இருக்கிறார் அம்மு அபிராமி!
அம்மு அபிராமி. 2கே கிட் என பலராலும் அன்புடன் அழைக்கப்படும் அபிராமி ராட்சசன், அசுரன் என் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ராட்சசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடிந்திருந்தார். அசுரன் திரைப்படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவர் அதன் பிறகு விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 யில் கலந்து கொண்டு சமூக ஊடகங்களில் பிரபலமானார்.
அவருக்கென ஒரு ரசிகர் வட்டமே உருவானது. சில நாட்களுக்கு முன் அவர் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி “கண்மணி அன்போடு காதலன்” என்ற குணா பட பாடலுக்கு வைப் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
ரசிகர்களும் அபிராமியுடன் அவர் வைப்பில் கலந்து கொண்டு கமென்ட் களை தெறிக்க விட்டிருந்தனர்.
குக்கு வித் கோமாளி சீசன் 3 யில் கலந்து கொண்ட அபிராமி டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் அதன் மூலம் பெரும் புகழடைந்தார். அந்நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவரது ரசிகவட்டம் அவரை கொண்டாடி வருகிறது. சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் எளிமையான அழகுடன் அம்சமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தரனர்.
சமீபத்தில் ஒரு பொட்டிக் ஒன்றிற்கு மாடலாக இருந்து அதன் புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார் அபிராமி.. பொட்டிக் நன்றாக போகுதோ இல்லையா அம்முவின் புகைப்படங்கள் கமென்ட்ஸை வாரிக் குவித்து வருகிறது.
அதைத்தொடர்ந்து தற்போது பர்புல் நிற அவுட்பிட்டில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அம்புகளை பட்டங்கள் லைக்ஸை அள்ளுகிறது.