நம்ம பூங்குழலியா இது. படத்தில் பல தரமான சம்பவங்கள் இருக்கும் போலயே. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ammu trailer video viral

ஐஸ்வர்யா லட்சுமி கார்கி பட விழாவில் கண் கலங்கினாங்க எப்படியோ ஒரு வழியா இந்த படத்தை கொண்டு வந்து சேர்த்துட்டோம் என்று, அவங்களும் அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் ஒன்னு பண்ணிருந்தாங்க. அடடா என்னடா இவங்க சினிமா மேல இவ்வளவு காதல் வெச்சிருக்காங்க, இவங்க திறமைக்கு ஏற்றவாறு இன்னும் எந்த இயக்குனர்களும் கதை எழுத மாற்றாங்களே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தது. எப்படியோ பொன்னியின் செல்வன் படத்துக்கு பின் இவங்க செம்ம பிசி.

பொன்னியின் செல்வன் படம் மூலமா இவங்களுக்கு பூங்குழலி கதாபாத்திரம் மூலமா அவங்க நடிப்புத்திறமை மூலமா மக்களை கவர்ந்து இழுத்துட்டாங்க. இனி இவங்க நடிக்கும் படங்கள் எல்லாமே முன்னர் இருந்ததை விட சிறப்பான வரவேற்பு கண்டிப்பா கிடைக்கும். சமீபத்தில் வெளியான மலையாள படத்தில் கூட இவரின் நடிப்பை வெகுவாக மெச்சினர்.

தற்போது அம்மு என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இவங்களுக்கு இன்னொரு அவதாரம். ஒரு டாக்ஸிக் கல்யாணத்தை பற்றிய கதை. காதலித்து திருமணம், பின் அந்த கணவரால் மனைவி எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை பற்றிய கதை. இது இந்தியா முழுவதும் நாடாகும் ஒரு பிரச்னை, இது அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. மனைவியை கொடுமைப்படுகிறார்கள் என்று பல கேஸ் போடப்பட்டிருக்கு. இந்த படத்தில் கணவனாக வருபவரே ஒரு போலீஸ் ஆபிசர்.

மேலும், இந்த படத்தில் revenge கூட இருக்கு. இரண்டாம் பாதியில் தான் இவங்க அவங்களோட கணவருக்கு தக்க படம் புகட்ட வேண்டும் ன்று ஒன்று சிலரோடு சேர்ந்து செய்யும் தரமான சம்பவம். இந்த படத்திற்காக இவங்களுக்கு நிறைய விருதுகள் கூட கிடைக்க வாய்ப்பிருக்கு. பாபி சிம்ஹா ரொம்ப முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கார். கார்த்திக் சுப்பாராஜ் சேர்ந்து தயாரிச்சிருக்கார்.

Video:

Related Posts

View all