கொடுத்து வைத்த கண்ணாடி போல! அனிகா சுரேந்திரனின் ரீசன்ட் மிரர் செல்ஃபி வைரல் ஆகும் புகைப்படம்.
நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன், இப்பொழுது வளர்ந்து விட்டார்.. அவரது சமீபத்திய ஓணம் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
2010ம் ஆண்டு வெளியான கதா துடருனு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.
அதற்கு முன்னதாகவே சோட்டா மும்பை படத்தில் நடித்துள்ளார். நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடிகை திரிஷாவுக்கு மகளாக நடித்த அனிகா, விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்து அசத்தி இருந்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தில் குழந்தை நயன்தாராவாக அனிகா சுரேந்திரன் நடித்திருந்தார். ஆகையால் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன் என்றே அழைத்து வருகின்றனர்.அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஓ மை டார்லிங் மற்றும் இன்னும் ஒரு சில மலையாளப்படங்களில் கதாநாயகி அவதாரம் எடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான நாகர்ஜுனாவுடர் இணைந்து அவர் முக்கிய வேடத்தில் நடித்த “தி கோஸ்ட்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் திரைப்படத்தில் இருந்து அவரது புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது அம்மனி ஒரு மிரர் செல்ஃபி வெளியிட்டுள்ளார். செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அப்புகைப்படம் லைக்ஸை அள்ளுகிறது.