ஆனந்த யாழை பாட்டு அனிருத் வாய்ஸ்ல கேட்டிருக்கீங்களா.. அம்மாடியோவ்.. வீடியோ வைரல்.
2023 வருடமும் யாரெல்லாம் இந்த பாடலை பாக்குறீங்க முத்துகுமார் அவர்களின் அருமையான வரிகள். அப்பா மகளுக்காக பாடும் தேசிய கீதம். நா.முத்துக்குமார் மறைந்தாலும் காலத்திற்கு அழியாத பாடல் வரிகள். இந்த பாடலை கேட்டால் என் போன்று வாலிபனுக்கும் பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை வருகிறது Always Na. Muthukumar lyrics addicted 💫
அழகான வரிகளில் வாழும் அமைதியான புயல் . முத்தான வரிகளில் தமிழ் முத்தாக. காட்சியகம் ஆகும் மூத்துக்குமரனே! உனது பாடல்களால் என்றும் நீ நிலைத்திருப்பாய் கவியே! மகள்களை பெற்ற அப்பாகளுக்கு மட்டுமே.. தேவதைகளின் அன்பு புரியும் ..😍 காலத்தால் அழியாத பாடலை படைத்த கவிஞர் நா.முத்துக்குமார் புகழ் வாழ்க பல்லாண்டு.
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
ஆண் : இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
ஆண் : தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்தா பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆண் : ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
ஆண் : உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆண் : { ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் }
இந்த பாடலை அனிருத் குரலில் கேட்க வேண்டுமா: வீடியோ:
ANIRUDH 🥹❤️✨pic.twitter.com/DLADvKstiG
— Saloon Kada Shanmugam (@saloon_kada) July 24, 2023