லோகேஷுக்கு கார்.. சூர்யாவுக்கு வாட்ச்.. உங்களுக்கு என்ன என கேட்ட செய்தியாளர்.. அனிருத் சொன்ன பதில் வீடியோ வைரல்..
விக்ரம் படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர். படத்தை வாங்கின அனைவருக்குமே நல்ல லாபத்தை தந்துள்ளது.
இந்த வெற்றியை கமல் லோகேஷுக்கு கார், உதவி இயக்குனர்களுக்கு பைக், சூர்யாக்கு வாட்ச் என கிப்ட்களை அள்ளி கொடுத்தார்.
விக்ரம் படத்தில் இசை அனைவராலும் பெரிதாக ரசிக்கப்பட்டது. அனிருத்துக்கு என கிப்ட் கொடுக்கப்போகிறார் உலகநாயகன் என்று சமூக வலைத்தளங்களில் பேசாதவர்கள் இல்லை.
இந்நிலையில் கேரளாவில் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஒரு செய்தியாளர் அந்த கேள்வியை கேட்டே விட்டார். அதற்கு அனிருத் ‘இந்த படம் எனக்கு கொடுத்ததே பெரிய கிப்ட் தான்’ என்று சொல்ல அரங்கம் அதிர்ந்தது.
Viral Video:
#AnirudhRavichander thug life..🤩🔥#Vikram @anirudhofficialpic.twitter.com/j4ZPMjvjFb
— Laxmi Kanth (@iammoviebuff007) June 15, 2022