ஓப்பனா இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா.. பீஸ்ட் பிளாக்பஸ்டர். அண்ணாத்தே படம் பாக்கவே இல்லையாம்.

Annatthe vs beast video viral

அண்ணாத்தே படம் போன தீபாவளிக்கு ரிலீஸ் ஆச்சு, ஆனால் அந்த படம் ஹிட்டா பிளாப்பா என்று ஒரு வருசமா debate போயிடு இருக்கு சமூக வலைத்தளங்களில். எல்லாருக்கும் தெரிந்த விஷயம் அந்த படம் பெருசா போகவில்லை என்று. ப்பா ரஜினி படம் டா என்று சொல்ற அளவுக்கு இல்லை, சில இன்ட்ரோ, மாஸ் சீன்ஸ் தவிர. தங்கச்சி செண்டிமெண்ட் எல்லாம் சுத்தமா ஒர்கவுட் ஆகல. ஆனால் இந்த படத்தின் வசூல் 34 கோடி என்று சில விமர்சகர்களால் சொல்லப்பட்டது, ஆனால் அவ்வளவு வசூல் செல்லைய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன பிறகு தான் சமூக வலைத்தளங்களில் பஞ்சாயத்து தான். ஏனென்றால் ரஜினி விஜய் ரசிகர்களிடத்தில் தான் அந்த முதலிடம் யாரிடத்தில் தற்போது இருக்கிறார்கள் என்ற போட்டி. அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்னவென்றால் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் தான் இன்று வரை நம்பர் 1, இதை எந்த படமும் பீட் பண்ணவில்லை என்று. ஆனால் அஜித் ரசிகர்கள் வலிமை என்று கூறுவார், ரஜினி ரசிகர்கள் அண்ணாத்தே என்று கூறுவது வழக்கம்.

Annatthe vs beast video viral

அதையெல்லாம் உடைக்கும் விதத்தில் இருந்தது உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய பேட்டி. அவரின் கலகத்தலைவன் படத்தின் ப்ரோமோஷன்க்காக நிறைய நேர்காணல் கொடுத்து வருகிறார். படம் அந்த அளவுக்கு செம்மயா இருக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால் அவர் எல்லா பேட்டியிலும் ரொம்ப straight forward-ஆ பேசுறாரு. இவ்வளவு ஓப்பனாவா எல்லாத்தையும் சொல்வாங்க என்றளவுக்கு அவர் ஓபன் என்றால் பாத்துக்கோங்க.

அப்படி பேசும்போது பீஸ்ட் படம் செம்ம பிளாக்பஸ்டர், ஆனால் அண்ணாத்தே படம் அந்தளவுக்கு போகல என்று நிறுத்தாம நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தான் இப்போதும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Video:

Related Posts

View all