குயீன் அனுஷ்கா இஸ் back.. என்ன அழகா இருக்காங்க திரையில்.. பேரழகி.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நியாயமா லேடி சூப்பர்ஸ்டார் டைட்டில் அனுஷ்காக்கு தான் போயிருக்கும் அவங்க மட்டும் சினிமால இருந்து பிரேக் மட்டும் எடுக்காம இருந்திருந்தா. அதற்குப்பின் வந்த நடிகைகள் வந்துட்டு போய்ட்டுமா இருக்காங்க ஆனால் யாராலயும் அனுஷ்காவின் இடத்தை நிரப்ப முடியல. அவங்க ஏற்படுத்தின தாக்கம் அப்படி.
ஒரு மேடையில் வடிவேலு ரஜினியை பற்றி சொல்வாரு ஒரு 10 வருடத்திற்கு முன். சூப்பர்ஸ்டார் என்ற படத்தை ஒரு 2 வருடம் அதாவது எந்திரன் ஷூட்டிங் போது விட்டுட்டு போய்ட்டார். ஆனால் அந்த இரண்டு வருடம் வந்த படங்கள் ஒன்னு கூட அவர் விட்டுட்டு சென்ற இடத்தை நிரப்ப முடியல, மீண்டும் இந்த படம் மூலம் அவரே வந்து நிரப்பியிருக்கார் என்று.
அந்த பேச்சு நடிகைகள் என்று எடுத்துக்கொண்டால் அனுஷ்காக்கு கச்சிதமா பொருந்தும். இவ்வளவு நாள் பிரேக் எடுத்துட்டு இருந்தவங்க, இப்போ மீண்டும் அழகான ஒரு படம் மூலமா comeback. இவங்களுக்கு இந்த நேரத்தில் இப்படியொரு படம் ரொம்ப முக்கியம். படத்தின் பெயர் Miss Shetty Mr Polishetty, கதையின் நாயகனாக நவீன் போலீஸெட்டி நடிச்சிருக்காரு.
நவீன் கடைசி கொஞ்ச வருடமா தொட்டது எல்லாம் ஹிட்டு, அந்த ஊர் சிவகார்த்திகேயன் போல அவரோட சினிமா வாழ்கை வேகமா வளர்ந்துட்டு வருது. கண்டிப்பா இவர் தான் தெலுங்கு சினிமாவின் அடுத்த பெரிய விஷயமா இருக்கப்போறாரு. இவருக்கு காமெடிய சூப்பரா வருது, அனுஷ்கா கூட ஜோடி சேர்ந்திருக்காரு பார்க்கலாம் இந்த படம் எப்படி வந்திருக்குன்னு.
Video: