கடைசில ரகுமானையும் விடலையா நீங்க.. க்யூட்டா பண்ணிட்டு இருக்காரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Ar rahman video viral

பத்து தல.படத்தில ரகுமான் செமையான சம்பவத்தை செஞ்சிருக்காரு. டிரம்ஸ் புரோகிராம் பண்ணினது ரஞ்சித் பரோடா அல்லது சிவமணியா தெரியல ஆனா தியட்டரில அனல் பறந்தது. ராவடி வீரா ராரா ராவடி வீரா ராரா..🔥 இப்போவும் இசையில் நான் கிங் என்று காட்டினார் ரகுமான். அந்த படத்தின் ஆல்பமே வேற லெவல்.

சமூக வலைத்தளத்தில் ஒரு பக்கம் இருக்கிறது. அதில் என்ன பண்ணுவாங்க என்றால் எல்லாரையும் யாரின் மனது புண்படாத வண்ணம் கலாய்ப்பாங்க. அப்படி நம்ம இசைப்புயலை செல்லமா கலைச்சிருக்காங்க. அவர் இந்த ராவடி பாட்டு ரெக்கார்ட் பண்ணும்போது எப்படி ரியாக்ட் பண்ணிருப்பார் என்று.

Ar rahman video viral

அந்த பாட்டில் ராவடி ராவடி என்று வரிகள் வரும், ஆனால் சட்டென்று ஒரு இடத்தில ராபெரி என்று கேட்கும். அதை கவனித்த அவர்கள் அதைவைத்து செல்லமா ட்ரோல் பண்ணிருப்பாங்க போல. அது எப்படியோ இசையமைப்பாளர் ரகுமான் பாத்துட்டார். இப்போ அவங்க எப்படி பண்ணினாங்களோ அதேபோல பண்ணிருக்காரு.

இந்த பாட்டு யாரு பாடினாங்களோ அவங்க, பின்னர் யார் இந்த பாடலை எழுதினங்களோ அவரு அதாவது கவிஞர் ஸ்நேஹன் மற்றும் இசைபுயல் சேர்ந்து ஒரு வீடியோ பண்ணிருக்காங்க. சும்மாவே ரகுமான் ரொம்ப சஹ்ய, அவர் பண்ணுவது எல்லாம் க்யூட்டா இருக்கும். இந்த வீடியோ இப்போ வைரல் ஆகிட்டு இருக்கு.

Video:

Related Posts

View all