என்னடா டைட்டில் இது அரியவன் அப்டின்னு.. அட திருச்சிற்றம்பலம் இயக்குனரு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
#திருச்சிற்றம்பலம் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு இந்த காணொளி ஒரு உதாரணம். தமிழக மக்களுக்கு ஒரு படம் பிடித்து விட்டால் கொண்டாட தயங்க மாட்டார்கள். அன்பு சகோதரர் இயக்குனர் மித்ரன் ஜவகர் அவர்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. என்ன காணொளி என்று கேட்கறீங்களா கீழே அட்டாச் செய்துள்ளோம்.
இந்த படத்தை இயக்குனர் திருச்சிற்றம்பலம் படம் எடுப்பதற்கு முன்னாடியே எடுத்திருப்பார் என்று நினைக்கிறோம். அதற்குப்பின் அது பைனான்ஸ் பிரச்சனையால் நிற்க, பின்னர் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படம் பண்ணிருப்பாரு போல. ஏனென்றால் கொஞ்சம் பழைய படம் மாதிரி தான் இருக்குது.
ஆனால் இந்த படத்தில் திருச்சிற்றம்பலம், யாரடி நீ மோகினி பட இயக்குனரிடம் என்று போட்டிருப்பாங்க. இது உணர்த்துது அந்த படம் எவ்வளவு பெரிய வெற்றி என்று. படத்தின் பெயர் அரியவன். என்னடா படத்துக்கு இப்படி ஒரு டைட்டில் வெச்சுருக்கீங்க தூவும் அறிமுக நாயகனை வைத்துக்கொண்டு என்று தான் சொல்ல தோன்றுகிறது.
படத்தில் வில்லன் டேனியல் பாலாஜி. இவர் ஒருத்தர் தான் பார்த்தவுடன் கண்டுபிடிக்கும் முகம் போல இருக்கிறார். இவரை சுற்றி தான் படம் நாடாகும், இவர் செய்யும் தவறுகளால் ஹீரோ எப்படி கதைக்குள் வருகிறான் என்பது தான் மீதிக்கதை. முதல் படம் என்பதால் இந்த நடிப்பு ஓகே. ஆனால் நிலைத்து நிற்க இன்னும் நீங்க நிறைய effort போடா வேண்டும் இஷான்.
Video: