கலைஞன்க்கு சாவே கிடையாது.. நா.முத்துக்குமார் கவிதை இப்போ பாடல். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
காதல் கவிதை எழுதுபவர்கள் கவிதை மட்டும் எழுதுகிறார்கள். அதை வாங்கிச் செல்லும் பாக்கியசாலிகளே காதலிக்கிறார்கள்.
உலகத்தில் உள்ள சித்ரவதைகெல்லாம் செல்ல பெயர் வைத்தால் காதல்.
-நா.முத்துக்குமார்
முத்துக்குமார் என்பது பெயர், நா.முத்துக்குமார் என்பது கவிதை. அநீதி படத்தின் முதல் பாடல் திகட்ட திகட்ட காதலிப்போம் நா முத்துக்குமார் கவிதை வரிகளில், ஜி.வி.பிரகாஷ் இசையில் தற்போது வெளியாகி செம்ம வைரல். இந்த படத்தில் நாயகன்/நாயகியாக அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடித்துள்ளனர்.
என்னடா இவங்க பா.ரஞ்சித் படத்தில் மட்டும் நடிச்சுட்டு இருக்காங்க என்ற கேள்வி இருந்து வந்தது. இப்போது வசந்தபாலன் இயக்கத்தில் நடிச்சிருக்காங்க. நல்ல நடிகை, எல்லா இயக்குநர்களோடு படம் பண்ணினால் தான் நிலைச்சு நிற்க முடியும் இல்லையென்றால் அதே category முத்திரையை குத்தி விடுவர். அதனால் இந்த change நல்லது. அந்த பாடலில் சும்மா இரண்டு மூன்று ஸ்டில்ஸ் வரும் அதுவே பார்ப்பதற்க்கு அற்புதமாக இருக்கிறது.
அர்ஜுன் தாஸை வில்லனாகவே வெச்சுக்குவாங்க தமிழ் சினிமா என்று நினைத்தோம், நல்ல வேலையாக ஹீரோ ஆகிவிட்டார், அவரை பார்த்தாலே தெரியுது அவர் ஒரு ஹீரோ material என்று. இவரை கரடு முரடாகவே பார்த்து ரொமான்ஸ் செய்வது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அனாலும் அந்த ஆங்கிரி யங் மேன் மூட் அப்படியே வெச்சிருக்காரு, படகின் டைட்டில்கேத்த மாதிரி.
Video: