அர்ஜுன் தாஸ்-ன் அடுத்த சம்பவம் அதுவும் இந்த இயக்குனரோடு. கொல மாஸ் அப்டேட். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
![Arjun das tanya next update](/images/2022/11/05/arjun-das-next-update-2-.jpg)
இன்று தமிழ் சினிமாவின் மூன்று ரோம் காம் படங்களை எல்லாம் தாண்டி ஒரு அப்டேட் அணைத்து சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சி படுத்தியிருக்கு என்றால் இயக்குனர் சாந்தகுமாரின் மூன்றாவது படத்தின் அப்டேட். எல்லாரும் கேட்கலாம் யாரு சாந்தகுமார் என்று? ஆனால் அவர் எடுத்த இரண்டு படத்தின் பெயர்களை சொன்னால் போதும் அந்த பெயரின் மேல் ஒரு தனி மரியாதையே வரும்.
இயக்குனர் சாந்தகுமார் எடுத்த இரண்டு படங்கள், முதல் படம் மௌனகுரு, இரண்டாவது படம் மகாமுனி. முதல் படம் அவருக்கு 2011ம் ஆண்டு ரிலீஸ் ஆனது, இரண்டாவது படம் 2019ம் ஆண்டு. அய்யோ அடுத்த படத்தை இன்னும் 8 வருடங்கள் களைத்து தான் எடுப்பாரா என்று காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இன்று அவர் படத்தின் அப்டேட் வந்துள்ளது. படத்தின் நாயகன் அர்ஜுன் தாஸ், நாயகி தான்யா ரவிச்சந்திரன். இந்த படம் இருவருக்குமே மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
![Arjun das tanya next update](/images/2022/11/05/arjun-das-next-update-1-.jpg)
அர்ஜுன் தாஸ்க்கு அடுத்தடுத்து நல்ல படங்கள் அமைஞ்சிருக்கு. நல்லா இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு முன்னணி கதாநாயகனா வர்ற ஒரு வாய்ப்பு இருக்கு. அதேபோல் தான் தான்யாக்கும் இப்போது தான் இவங்களுக்கு னால நல்ல படமா அமையுது. உதயநிதி கூட நெஞ்சுக்கு நீதி, அதர்வா கூட ட்ரிக்கர் இந்த படம் மீண்டும் இவங்களை ஒரு நாயகியா அறிமுகம் செஞ்சு வெச்சிருக்கு.
சாந்தகுமார் அடுத்து என்ன போகிறாரா என்பதில் இருக்கிறது எதிர்பார்ப்பு. முதல் இரண்டு பந்தலிலும் அவர் சூழ வந்த விஷயங்கள், கருத்துக்கள் எல்லாமே தமிழ் சினிமாவிற்கு புதுசு. அதனால் இந்த படத்தில் அதுவும் அர்ஜுன் தசை வைத்து என்ன பண்ண போகிறார் என்ற ஆர்வம் இப்போதே ஆரம்பித்துவிட்டது.
Starting my 3rd movie under my production house “DNA Mechanic Company” with @iam_arjundas @actortanya #sujithShankar @ReshmaVenkates1 @actorramya @GMSundar_ @MusicThaman @EditorSabu @SPremChandra1 @GRNSivakumaar @minu_jayebal @dancersatz @SureshChandraa @YugabhaarathiYb pic.twitter.com/COCUfK1j9r
— Santhakumar (@Santhakumar_Dir) November 4, 2022