AR.முருகதாஸ் சம்பவம் லோடிங். மாஸ் ஹீரோ. முரட்டு comeback கொடுக்கப்போறாரு. லேட்டஸ்ட் அப்டேட். முழு விவரம்.
விக்ரம் படத்தில் ஒரு பாட்டு வரும் “once upon a time there lived a ghost” என்று. அப்படியொரு எடிட் செய்தால் இயக்குனர் முருகதாஸ்-க்கு கச்சிதமாக பொருந்தும். எப்படிப்பட்ட இயக்குனர் சமீப காலம் சர்வருக்கு சரியாக அமையல. ஆனால் comeback கொடுக்கணும் என்று உறுதி எடுத்துட்டார் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாதது. அவர் அமைதியாக இருப்பது பாய்வதற்கு தான்.
சினிமா கனவோட சென்னை வரும்போது, சென்னை வந்துடுச்சிடானு சொன்னதும் முழிச்ச பார்க்குறேன். ரஜினி சாரோட பில்லா கட்அவுட் கீழ ஜிகினா வேலைப்பாடுகளோட பிரமாண்டமா நிக்குது. நான் மெட்ராஸை ரஜினி சாரை வைத்து தான் அடையாளம் கண்டேன். இப்படி தான் முருகதாஸ்-க்கு தமிழ் சினிமா அறிமுகம். ரஜினிக்கு ஒரு மெகா ஹிட் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் கண்டிப்பா இருக்கும்.
#துப்பாக்கி #கத்தி #சர்கார் மூனு படமும் ஒவ்வொரு ரகம் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் விஷயத்தை ரொம்ப அழுத்தமா சொல்லிருப்பர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய் - முருகதாஸ் காம்போ எப்போ வந்தாலும் கண்டிப்பா ஹிட் அடிக்கும். ஏன் இதை சொல்கிறோம் என்றால் விஜய் சன் picturesக்கு ஒரு படம் பண்ண போகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் முருகதாஸ் தான் அப்போது இயக்குநரா இருந்தாரு. ஆனால் சன் pictures மாட்டி விட்டு கடைசியில் நெல்சன் பீஸ்ட் பண்ணாரு. வசூல் ரீதியா பெரிய படம் தான், ஆனால் மக்களை திருப்தி படுத்திய படமா என்றால் இல்லை.
தற்போது இவர் comeback கொடுக்கிறார். அனிமேஷன் படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சிம்புவை தான் ஓகே பண்ணிருக்காரு. சிம்புவின் ஐம்பதாவது படத்தை இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுது. ஆகமொத்தம் நமக்கு தவை அவரோட comeback. யார் ஹீரோவா இருந்தா என்ன. அவர் திரும்பி வரணும்.