அருள்நிதியின் டைரி. புதுசு புதுசா ஹீரோயின் இறக்கறாங்க..லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
அருள்நிதியின் டைரி படம் வரும் வாரங்களில் ரிலீஸ் ஆகிறது. அதனால் படத்தின் ப்ரோமோஷன்ஸ் முழு வீச்சாக சென்று கொண்டிருக்கிறது.
தினம் தினம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்/நடிகைகளின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று படத்தில் சோனியா சுரேஷ், ருத்ராவின் கதாபாத்திர லுக் வெளியாகியுள்ளது.
படத்தின் இயக்குனர் கூறுகையில் இவர்கள் இருவரும் உங்கள் மனதை அவர்கள் நடிப்பின் மூலம் கொள்ளை கொல்ல போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கோவையை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்த சம்பவங்களை வைத்து கற்பனையாக உருவாகியிருக்கும் த்ரில்லர் படம் தான் இந்த டைரி. அருள்நிதிக்கு இந்த மாதிரி கதாபாத்திரம் எல்லாம் கேக்வாக்.