லண்டன் வீதிகளில் அருண் விஜய்.. எமி ஜாக்ஸன் கூட.. நிமிஷா சஜயனும் இருக்காங்க. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Arun vijay al vijay movie update

அருண் விஜயின் மிகவும் பிரமாண்ட பொருட்செலவில் லண்டனிலே படத்தின் முழு ஷூட்டும் பிளான் செய்யப்பட்டு உருவாகி கொண்டிருக்கும் படம் “அச்சம் என்பது இல்லையே”. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மதராசபட்டினம் படம் மூலம் அறிமுகம் ஆன எமி தான் இந்த படத்திலும் ஹீரோயின், நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் படம். சமீபத்தில் மலையாள படத்தின் சென்சேஷன் யார் என்று கேட்டால் நிமிஷா சஜயன் தான் அவங்களும் இந்த படகில் முக்கியமான கதாபாத்திரம்.

என்னடா இவ்வளவு நாள் ஆகியும் ஏ.எல்.விஜய் எந்த படமும் எடுக்கலையே என்று நினைத்து கொண்டிருக்கும் போது இந்த அப்டேட். 2021ம் ஆண்டு ஜெயலலிதா biopic பண்ணாரு, ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தவில்லை. ஆனால் கங்கனாக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த படத்தில் என்ன பிரச்னை என்றால் கிளைமாக்ஸ் அவ்வளவு நன்றாக ஒர்கவுட் ஆகவில்லை, இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கு லீட் கொடுப்பது போல் இருந்தது.

இந்த படம் லண்டன் வீதிகளிலேயே படமாக்கப்படவுள்ளது. அருண் விஜய்க்கு இந்த சமயம் தொட்டதெல்லாம் ஹிட்டு. வரிசையாக மினிமம் கேரண்ட்டி படங்கள் கொடுத்து வருகிறார். அறிவழகன் இயக்கத்தில் பார்டர் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படமும் ஹிட் ஆகும் பட்சத்தில், அச்சம் என்பது இல்லையே படத்துக்கும் செம்ம எதிர்பார்ப்பு காத்திருக்கு. கிராமத்து ரோல், கோட் சூட் எது போட்டாலும் செம்மயா சூட் ஆகுது அருண் விஜய்க்கு.

சமீபத்தில் வெளிவந்த சினம் படமும் இவரை ஒரு தூக்கு தூக்கியுள்ளது. இந்த நல்ல நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டால், டயர் 1 நடிகர்களில் சீக்கிரம் இடம்பெற்று விடுவார். எல்லா படமும் ஹிட் ஆகுது, ஆனால் பிளாக்பஸ்டர் இண்டஸ்ட்ரி ஹிட் என்பது எட்டாக்கனியாக உள்ளது, அதற்கு தேவை இன்னும் ஒரு நல்ல கதை. அதுமட்டும் அமைந்துவிட்டால் இவரின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

Video:

Related Posts

View all