ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த சித்தி இத்னானி. செம்மயா இருக்காங்க ரெண்டு பேரும். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Arya34 movie update photos viral

விருமன் படத்தின் வெற்றிக்கு பின் முத்தையா அடுத்த படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார். விருமன் படம் வணிக ரீதியில் மட்டுமே வெற்றி, ஆனால் திரைக்கதையில் அவ்வளவு சுவாரசியம் இல்லை. அப்பாவுக்கும் - மகனுக்குமான சண்டை, கிளைமாக்ஸில் அப்பா மனம் மாறுவது போன்ற சிவாஜி காலத்து கதை தான் அது. கார்த்தியின் stardom-ல் அந்த படம் ஹிட் ஆகிவிட்டது.

ஆனால் அதேபோல் மீண்டும் கிராமத்து கதையில் விறுவிறுப்பான திரைக்கதை, செண்டிமெண்ட் காட்சிகள் இல்லாமல் எடுத்தால் கண்டிப்பாக அவரின் அடுத்த படம் பெரிய அடி வாங்கும் என்று மும்பே விமர்சகர்கள் எச்சரித்தனர். தற்போது இவரின் அடித்த படத்தின் அறிவிப்பு, இன்று பட பூஜையுடன் தடங்கியிருக்கிறது. ஆர்யா நடிக்கும் அவரின் 34வது படத்தை இயக்கவுள்ளது முத்தையா தான்.

இந்த படத்தில் அர்த்தம் ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். வெந்து தணிந்தது காதில் இவர் கொடுத்த impressive performance தான் இதற்கு காரணம். ரொம்ப சட்டிலாக நடித்திருந்தார். இந்த படத்தை ஜீ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது, அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.

மீண்டும் கிராமத்தில் நாடக்கும் கதைக்களத்தையே முத்தையா தேர்வு செய்துள்ளார். இந்த படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். ஆர்யாவுக்கு கிராமத்து கதை எப்படி செட் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய இந்த தாடி கெட்டப் சூப்பரா இருக்கிறது. கதை நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். பெரிய ஹிட் அடைய வாழ்த்துக்கள்.

Latest Photos:

Related Posts

View all