எப்போ பாரு பொம்பள புள்ளைங்கள கடிச்சு வெச்சுட்டு இருக்கான் கோளாறு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
எவ்வளவு அடி பட்டாலும் திருந்தவே மாட்டான் போல. இந்த வாரம் கமல் இறங்கி எதாவது பேசுனா தான் உண்டு, இவன் பெண்களிடம் அத்துமீறல்களை நிறுத்துவான் போல. பிக் பாஸ் வீட்டில் ஒரு சில விஷயங்களை எல்லாம் தவிர்க்க வேண்டும். இவ்வளவு கோடி ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் கொஞ்சம் கட்டுப்பாட்டோடு கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் முன்னாடியே தெரிந்திருந்தால் கூட பரவாயில்லை, யாரும் ஒருவருக்கொருவர் சந்தித்ததே இல்லை.
இந்த அசல் கோளாறு நினைக்க வேண்டும், இந்த பெண்களின் குடுபத்தினர் உறவினர் எல்லாரும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார், இவ்வாறு நடந்துகொள்ள கூடாது என்று. மணிகண்டன் கூட வார்னிங் கொடுத்தார், இப்படி எல்லாம் பண்ணக்கூடாது என்று. ஆனால் எங்க கேக்குறான் அவன் இஷ்டத்திற்கு ஆடிட்டு இருக்கான்.
நிவாஷினியை கட்டிப்பிடிப்பது, கடித்து வைப்பது. பின்னர் Queencyயை கடிக்கும் போது வலிக்குது என்று அவொய்ட் பண்ணிட்டாங்க. அவங்க ரொம்ப uncomfortabeஆ பீல் பண்ணது அப்படியே முகத்தில் தெரிந்தது. பின்னர் அங்கிருந்து இடத்தை காலி செய்தார். ஒருத்தங்களை கடிச்சு வைப்பது எல்லாம் எந்த மாதிரியான பழக்கவழக்கம் என்று தெரியவில்லை, விளையாட்டுக்கு இதனை கோடி ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படி எல்லாம் பண்ணுவாங்களா.
எப்போப்பாரு பொண்ணுககிட்ட தான், ஒரு சிலர் அட்ஜஸ்ட் பண்ணிக்குறாங்க, ஒரு சிலர் கடுப்பாடிறாங்க. எல்லா விஷயத்திற்கும் ஒரு லிமிட் இருக்கு. லிமிட் கிராஸ் பண்ணும்போது கமல் இறங்கி வார்னிங் கொடுப்பது நல்லது.
Video:
Asal bites Niva and Queency. Queency is really uncomfortable.#BiggBossTamil6 pic.twitter.com/0OWiZelTh9
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 27, 2022