டிசைன் டிசைனா லவ்வு.. அசோக் செல்வனுக்கு அடுத்து இன்னொரு ஓ மை கடவுளே படம்.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
காதல் நமக்கு நம் வாழ்க்கையில் பல தருணங்களில் ஒவ்வொருவர் மீது வரும். மிகவும் இளைய பருவத்தில், பள்ளி வருவதில், காலேஜ் படிக்கும் போது, வேளைக்கு சென்ற பின்னர், பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் கல்யாணத்துக்கு பிறகு மனைவி மேல. இந்த நித்தம் ஒரு வானம் படம் அந்த பரிமாணங்களை தான் காட்டுகிறது என்று நினைக்கிறோம்.
அறியா வயதில் ரித்து வர்மாவுடன் காதல், பின்னர் அது பிரேக் ஆகி சிவத்தமிக்க ராஜசேகர் மீது காதல், அதையெல்லாம் தாண்டி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் அபர்ணா பாலமுரளி மீதான காதல் என்று பல காதல்கள், ஆனால் அது ஒருத்தனுக்கே என்ற கதை தான் இந்த படம் சொல்ல வருகிறது.
எப்படி இருந்தாலும் தான் ஒரு பெண் மீது ஆசைவைத்துக்கொண்டு பெரியவங்க சொல்றாங்க அப்டின்னு arranged கல்யாணம் பண்ணிக்குவாரு போல ஹீரோ அசோக் செல்வன், அல்லது காதலித்த பெண் கைவிட்டுட்டு போய்டுவாங்க, இல்லனா இறந்து போய்டுவாங்க. இவ்வளவு நாள் தமிழ் சினிமா இது போல டெம்ப்ளட் தான் டீல் செய்து வருகிறது.
இந்த படம் இதிலிருந்து எவ்வளவு வித்தியாசமா இருக்கபோகுது, அதைப்பொறுத்தது தான் பாக்ஸ் ஆபிஸ் ரன் உறுதிசெய்யப்படும். தற்போது அசோக் செல்வன் நடிச்சுட்டு வர்ற படம் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு, சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிச்சுட்டு வராரு. சமீபத்தில் வெளியான வேழம், மன்மத லீலை, ஓ மை கடவுளே படம் எல்லாம் நல்ல ஹிட். அதேபோல் இந்த படமும் அமைந்தால் அவர் அடுத்த லெவெலுக்கு போவார்.
Video: