படத்தின் பெயரே சும்மா மிரட்டுதே.. வலி உன்னை ஹீரோவுக்கும் அல்லது மிருகமாக்கும். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
காலமும், காதலும் ஏற்படுத்திய வலி வேண்டுமானால் மறையலாம் ஆனால் அதன் நினைவுகள் என்றும் ரணம் தான். உன்னால் ஏற்படுத்திய துரோகம் அதிகரிக்க அதிகரிக்க என் உதடுகள் தன் பேச்சை உன்னால் நிறுத்தி கொள்கிறது. இந்த ஒரு மூடில் தான் இருக்கும் என்று நினைக்கிறோம். நெஞ்சில் இருக்கும் வலி ஒன்று உன்னை வலிமையாக்கும் இல்லை அழிக்கும்.
வழியை பற்றி பேசும்போது ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. மாணவன் ஒரு ஆசிரியரை கை ஓங்கி அடிக்க முற்பட்ட செய்தி. அந்த தம்பி ஆசிரியரை அடிக்க கை ஓங்கியதைக்கூட மனம் ஒப்புகிறது. ஆனால் அந்த ஆசிரியரின் தாய், மனைவியை பற்றி பேசும் வார்த்தைகள் ஏற்படுத்திய வலி தீரவில்லை. இவ்வளவு சீழ்பிடித்த மனநிலையை என்ன சொல்வது.
காதல் கொடுக்கும் வலி அதைவிட மேல்: உனது பிரிவை பழகிக்கொள்ளும் மனநிலை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இந்த வலி சாகற காலம் வரை தொடரக்கூடும் போலிருக்கு. நீ ஏற்படுத்திய இந்த வலி உனக்கு எப்படி புரிய வைப்பது.
இறந்த வாலிப வயது மகனின் பாதுகாப்பு கிடைக்கப்பெறாத ஒரு பெற்றோரின் மனநிலை போன்றதொரு தவிப்பை கொஞ்சம் கற்பனை செய்து கொள்.
அதர்வா நடிக்கும் இந்த படத்தின் tagline நமக்கு இவ்வளவு கதைகள் சொல்கிறது. ஆனால் அந்த படம் என்ன கதை சொல்ல போகிறது என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். போஸ்டர் விக்ரம் வேதா படம் போன்று ஒரு தோற்றம் தருகிறது. படகின் பெயர் ‘தணல்’. அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா தான் இயக்குகிறார். பார்ப்போம்.