அப்பான்னா யாருக்கு தான் பிடிக்காது. முரளி பற்றி கேட்டபொழுது கொஞ்சம் எமோஷன் ஆயிட்டாரு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
அதிக புதுமுக இயக்குனரை அறிமுகப்படுத்திய பெருமை உங்களை சேரும் கதாநாயகனை தாண்டி நல்ல மனிதர். என்றும் உங்கள் அன்பும் சிரிப்பும் எங்கள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் தான். இதய’நாயகன் முரளி; சத்தமே இல்லாமல் கலெக்ஷன் காட்டிய வசூல் நாயகன்.
முரளியின் அந்த குழந்தைதனமான முகபாவமா, சிரிப்பா, நடனமா எதுவோ ஒன்று.. இந்த பாட்டுல முரளிய ஹெவியா லைக் பண்ண வச்சது. பொதுவா வீட்ல அம்மா அத்தை சித்திக்கு பிடித்த நடிகர் முதலில் ரஜினியா தான் இருக்கும். அடுத்ததா இடம் முரளி அல்லது மோகன் தான். கன்னட படங்களில் நாயகனாக நடித்து பிறகு தமிழில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்டு எல்லார் மனதிலும் இடம் பிடித்த கதாநாயகன் முரளி தான்.
சிரிச்சா அழகா இருக்கும். அழுதா ஐய்யோ பாவமா இருக்கும் ஏன்னா சில ஹீரோக்களுக்கு அழுகை அவ்வளவா எடுபடாது. ஆனால் அதில் அவர் கில்லி. இன்று ஏன் முரளியை பற்றி இவ்வளவு பேசுகிறோம் என்றால் அவருடைய வாரிசு பட்டது அரசன் படத்தின் ப்ரோமோஷன் போது, அவரைப்பற்றி கேட்டபொழுது கொஞ்சம் எமோஷன் ஆயிட்டாரு. ஒரு கஷ்டம் என்று வரும்போது தான் அப்பாவின் நினைவு வரும். வாழ்க்கைமுழுக குழந்தை, குடும்பத்தினருக்காகவே அர்ப்பணித்த மனிதன்.
அதர்வா இவ்வளவு படம் நடிச்சு ஹிட் கொடுத்துட்டு இருக்காரு, ஆனால் முரளி இப்போது இருந்திருந்தால் நிகண்டிப்பாக அவரை நினைத்து பெருமை பட்டிருப்பார்.
Video: