கொள்ளை கொள்ளும் அழகு.. மீண்டும் வெட்டிங் மேகஸின்களில் அதுல்யா ரவி, பிராண்ட் அம்பாஸிடர்! போட்டோஷூட் வைரல்.
![Athulya ravi new hot](/images/2022/11/22/athulyaravi.jpeg)
மீண்டும் வெட்டிங் மேகஸின்களில் அதுல்யா ரவி. பிராண்ட் அம்பாஸிடர் ஆகிவிட்டாரா போலும்… அதுல்யா தமிழ் நாட்டை சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூரை சேர்ந்தவரான அதுல்யா ரவி முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம். ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவராஜ் இயக்க இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் ஜிகே நடித்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
![Athulya ravi new hot](/images/2022/11/22/athulya-ravi-new-hot.jpeg)
அதன் பிறகு ஏமாளி, நாடோடிகள் 2 என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் அடுத்த சாட்டை என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் இயக்குனர். பாக்யராஜின் மகன் சாந்தனுவுடன் இணைந்து முருங்கக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அத்திரைப்படத்தில் கவர்ச்சி நாயகியாக புதிய அவதாரமெடுத்தார். அதைத்தொடர்ந்து அமலா பாலின் கடாவர், வட்டம் என பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம் மற்றும் ஒரு தெலுங்கு படம் என ஒரு சில படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.
![Athulya ravi new hot](/images/2022/11/22/athulya-ravi-new-hot22.jpeg)
சமீபத்தில் தன் முக அமைப்பை மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். சர்ஜரிக்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நிலையில் அதுல்யாவும் அதே ரூட்டில் பயனிக்கிறார் போல. அவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்து அதுல்யாவா இது என் வாயடைத்து நிற்கின்றனர் ரசிகர்கள்.
மீண்டும் வாரா வெட்டிங் மேகஸின்காக போட்டோஷுட் செய்திருக்கிறார் அதுல்யா. புல் ஒர்க்டு லெகங்காவில் கோஹினூர் வைரம் போல ஜொலிஜொலிக்கிறார். முகமாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் போல அதுல்யா.. அறுவை சிகிச்சைக்குப் பின் முக அமைப்பு மாறியது சரியென்றாலும் அவர் உயரமானதின் மாயம் தான் புரியவில்லை.
![Athulya ravi new hot](/images/2022/11/22/athulya-ravi-new-hot66.jpeg)