அட்லீயுடன் இணையும் அஜித்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்கலையே விஜய் பேன்ஸ். சுவாரசிய சம்பவம் அப்டேட் வைரல்.
திடீர்னு சமூக வலைத்தளங்களில் நேற்று பரவலாக வந்த செய்தி என்னவென்றால் அடுத்த படம் இயக்குனர் அட்லீ அஜித்துடன் சேர்ந்து படம் பண்ணுகிறார் என்பது தான். தற்போது பிசியாக SRKவின் ஜவான் படத்தில் வேலை செஞ்சுட்டு இருக்காரு. அதற்குள் இந்த செய்தி கசிய நேற்று இணையதளம் முழுக்க இந்த டிஸ்கஷன் தான்.
ஏனென்றால் தளபதி 68 படத்தின் இயக்குனரும் அட்லீ தான் என்று சொல்லப்பட்டது. தற்போது நேற்று வந்த செய்தி படி அட்லீ அஜித்தை இயக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் தற்போது அஜித் 67 படத்தில் பிசியாக இருக்கிறார், கண்டிப்பா அந்த படத்தை முடிக்க 6,7 மாதங்கள் ஆகிவிடும், அட்லீக்கும் ஜவான் ரிலீஸ் இருக்கு. ப்ராக்டிகலா யோசிச்சு பார்த்தால் 68 படத்தை இயக்க வாய்ப்பே இல்லை ஏனென்றால் ஜவான் ரிலீசுக்கு பின் தான் அவர் கதையே எழுத வேண்டும்.
இந்த ஒரு ஸ்டேட்மென்ட் சிவா அட்லீ வினோத் நெல்சன் வகையறாக்களும் பொருந்தும் அவங்க fame/market பல மடங்கு அதிகரிக்க விஜய் அஜித் ஒரு காரணம். Suppose அட்லீ அஜித் காம்போ நடந்தா படம் எப்டி இருக்கும்கரது ஒரு பக்கம் இருந்தாலும் அஜித்த ஃபேன்ஸ் எப்டி பாக்க விரும்புறாங்கங்ரத சரியா கெஸ் பண்ணி செதுக்கி குடுப்பார் அட்லீ என்பதில் சந்தேகமில்லை.
விஜய் சிவா காம்போன்னு சொன்னப்ப நம்ம சைட் எல்லாருமே வேண்டாம் வேண்டாம்ன்னு கதருனோம் இதே அட்லி அஜித் காம்போன்னு சொன்ன உடனே அந்த சைட் கொண்டாடுறாங்க அட்லி காபி டா சொன்ன அதே கூட்டம் கொண்டாடுது 😂 ஆனா உண்மை என்னனா #Thalapathy68 தலைவன் அட்லீ செய்யபோறது கொலை இல்லை வதம் அசுரவதம் என்று விஜய் ரசிகர்கள் ஒருபுறம்.