அயலி அயலி சமூக வலைத்தளங்களில் அதைப்பற்றி தான் பேச்சு. அப்படி இருக்கிறது. அயலி Review.
அயலி அயலி சமூக வலைத்தளங்களில் அதைப்பற்றி தான் பேச்சு. அப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று பார்த்ததற்கு பின் எழுதியது:
யாருய்யா இந்த series டைரக்டர்?. தெறிக்க விட்டுருக்காரு. பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் பத்தின கதை.. 8 episodes தான் சொல்ல வந்த விசயத்தை நச்சுன்னு சொல்லிருக்காப்ல. முக்கியமா சொல்ல வேண்டியது அதுல நடிச்ச பெண்களுக்கு கண்டிப்பா மூனு 🔥🔥🔥 விடலாம்.
பெண்களுக்கு எதிராக பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, பெண்களை சிறுமைப்படுத்தியத்தையும் பெண்கள் இத்தகைய கட்டுப்பாடுகள் நிறைந்த ஆணாதிக்க சமூகத்தில் எத்தகைய மனத்தடைகளை உடைத்து கல்வி பயின்றார்கள் என்பதையும் மிக நேர்த்தியாக சொல்லிஇருக்கிறது #அயலி.
அயலி சீரிஸின் முதுகெலும்பாக நிற்பது தமிழ்ச்செல்வி கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி, யதார்த்தமான நடிப்பை கொடுத்த அபி நட்சத்திராவிற்கு பாராட்டுகள்.
பழமைவாதத்திற்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் கொடுக்கப்பட்ட சாட்டையடி.
Ayali கண்டிப்பாக பார்க்கவேண்டிய தொடர்.
பல 90’s kid பெண்கள் வாழ்க்கையில் இந்த அயலி பெரும் தாக்கத்தை தரும். அவர்கள் கடந்து வந்த வாழ்கையை தான் பிரதிபலிக்கிறது.. இன்றளவும் திருமண சார்பான விஷயத்தில் மாற்றம் வரவில்லை என்பதே நிதர்சனம்.
#அயலி-அற்புதமான திராவிட மாடல் படைப்பு.
பெண்ணடிமைத்தனம்,மூடநம்பிக்கை, பெண்ணுரிமை, பெண்கல்வி என பெரியாரிய அரசியலை ஆணித்தரமாக முன்வைக்கும் உன்னத முயற்சி.
படக்குழுவினருக்கு அன்பும் வாழ்த்தும் அரசியல்வாதிகளே பாராட்டியுள்ளனர்.
Rating: 4.5/5