அரசியலா.. ஆன்மீகமா..? இப்போ தான் தெளிவான முடிவு. பாபா கிளைமாக்ஸ் மாற்றிய ரஜினி. வீடியோ வைரல்.

Baba re release celebrations video viral

என்னதான் பாபா தோல்வி படமா இருந்தாலும் ரசிகர்களுக்கு ரொம்ப நெருக்கமான படம். என்னா இந்த படத்தோட கதை திரைக்கதை தயாரித்தது ரஜினி. நிறைய அரிசியல் எதிர்ப்பும் வந்தது அப்படி இருந்தும் தலைவர்காக 115நாள் அந்த வருடத்தின் டாப் வசூலும் பெற்றது பாபா. பாட்ஷாவா பாபாவா என்று கேட்டால் கூட ரஜினி ரசிகர்கள் நிறைய பேர் பாபா என்று தான் சொல்வாங்க. ஏனென்றால் ரிலீஸ் ஆன போது அந்த படத்தை சுற்றி நடந்த சம்பவங்கள் அப்படி.

இங்க சில பேருக்கு பிடிக்கலைனு சொல்ற பாபா, ராகவேந்திரா, கபாலி படம் தான் ரஜினி ரசிகர்களுக்கு ரொம்ப பிடிச்ச படமா இருக்கும். ரசிகரா மாத்துன படம் பாபா இல்லை. பர்சனலா எல்லா ரஜினி ரசிகர்களுக்கு புடிச்ச படம் தான் பாபா. 80sலயே ஸ்லோ பாய்ஸன் மாதிரி தலைவர் எல்லார் மனசுலயும் இறங்கிட்டார். 92 அண்ணாமலைல இருந்து extreme ரீச் ஆயிட்டார் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Baba re release celebrations video viral

ரசிகர்களை மீண்டும் குழப்ப கூடாது என்ற நோக்கத்துடன் பாபா கிளைமாக்ஸ் மாற்றி ரிலீஸ் பண்ணியிருக்காங்க. அப்போ எல்லாருக்கும் இருந்த ஒரு confusion என்னவென்றால் அரசியலா, ஆன்மீகமா என்று தான்? தற்போது அவரால் அரசியல் இறங்க முடியவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்தவுடன் எப்படி அதேபோல் கிளைமாக்ஸ் வைக்கமுடியும்.

ரெகுலர் ரஜினி மசாலா ரசிகர்களுக்கு பாபா புரியாத புதிர்,இது ஸ்ரீராகவேந்திரர் படத்திற்கு இணையான ஒரு கமர்சியல் படம், படத்தில் ஒரே ஒரு குழப்பம் இனி ரஜினி ஆன்மீகத்திற்கா, அரசியலிற்கா என ரசிகர்களை புலம்ப விட்டது, கிளைமேக்ஸ் ரசிகர்களால் ரசிக்கப்படல, ஆனால் பாபா தரமான படம். ரி-ரிலீஸ் செய்யும்போது அந்த குழப்பம் இருக்கக்கூடாது என்பதற்காக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியுள்ளனர். அந்த வீடியோ தான் வைரல்.

Video:

Related Posts

View all