மீண்டுமா? சர்ச்சையும் இல்லாமல் படம் எடுத்ததே பெரிய விஷயம் யா.. பகாசுரன் சினிமா விமர்சனம். முழு விவரம்.

Bakasuran movie review

வழக்கமான பழிவாங்கும் கதையாக இல்லாமல், மகாபாரதம் பீமன் அவன் வதம் செய்யும் அசுரர்கள் ஆலியோருடன் இணைத்து நமது மண்சார்ந்த படமாக கொடுத்திருக்கிறார் மோகன். நட்டி ஒரு பக்கம், செல்வராகவன் இன்னொரு பக்கம் என்று இரண்டு கதைகளாக பயணித்து அதை இடைவேளையிப் இணைக்கும் திரைக்கதை அருமை.

தனது முந்தைய படங்களை விட இந்த படத்தை டெக்னிக்கலாக சிறப்பாக எடுத்து உள்ளார். பெரிதாக கான்ட்ரோவெர்சி இல்லாமல் இளம் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எடுத்து காட்டி உள்ளார். இதை அரசியல் கலக்காமல் எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். அது கலந்திருந்தால் இது வேற விதமாக இருந்திருக்கும்.

Bakasuran movie review

ஆனாலும், கிளைமாக்ஸ் விருந்து என்று தனியாக ஒரு மெகா விருந்து படைத்த விதம் அருமையோ அருமை. படிக்கும் பெண்களை பாலியியலுக்கு வற்புறுத்தி மிரட்டுபவர்களை வதம் செய்யும் #பகாசூரன். பல விதங்களில் நடப்பு உண்மை சம்பவங்கள் மூலம் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் இத்திரைப்படம்.

நண்பர் டைரக்டர் மோகன் ஜி அவர்களை விட எங்களுக்கு தான் இன்னும் பயம் அதிகமாக இருக்கிறது படம் வெற்றி பெற வேண்டும் என்பதில். காவி சொந்தங்களை நம்பியவர்கள் என்றும் ஏமாந்த சரித்திரம் இல்லை என்பதை காட்டுவோம் என்று குரூப் வேற ப்ரொமோட் பண்ணிட்டு இருக்கு, அதுயெல்லாம் இந்த படகுக்கு பாஸிட்டிவா அமைய வாழ்த்துக்கள்.

Rating: 3.25/5

Related Posts

View all