ஏதே திருமணம் கடந்த உறவா.. அதை பண்றதுக்கு இப்படி ஒரு பேரா. மோகன் ஜி சம்பவம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமா திரை துறையில் இயக்குனர் மோகன் ஜி போல் ஒரு கதை கொடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும் அருமையான படைப்பு பல பெற்றோர்களின் குமுறல் இப்படத்தில் அழகாக சொல்கிறார். மோகன் ஜி படம் என்றாலே சர்ச்சை தான். சாதி ரீதியாக ஒரு சமூகத்தை தாக்கும் விதத்தில் தான் கதை நகரும். அதுமட்டுமில்லாமல் அவரவர் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை யாராவது ஒருத்தர் சொல்லிதானே ஆக வேண்டும். இதுபோன்ற படங்களும் தேவை தான்.
படம் கண்டிப்பாக மக்கள் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும்…. விழிப்புணர்வு கண்டிப்பாக அதிகரிக்கும். 1:34 - இயக்குனர் டச் 2:49 - செல்வராகவன் நடிப்பு 1:44 - சாம் CS பின்னணி இசை
சமூக அக்கறை கொண்ட ஒருவனின் படைப்பு என்று இந்த ட்ரைலரை பார்த்துவிட்டு ரசிகர்கள் பாராட்டு.
சமூகத்தில் நிகழும் உண்மை சம்பவங்களை திரைப்படமாக வெளியிட தனி தைரியம் வேண்டும். திருமணம் கடந்த உறவு அந்த வசனம் நீங்கள் ட்விட்டரில் அரசியல் பேசுபவர்களை பின்தொடர்ந்தாள் கண்டிப்பாக இந்த வார்த்தையை கேட்டிருப்பீர்கள். சமூகத்தில் அங்கங்கே இதுபோன்ற தப்பு நடந்து தான் வருது. அது தப்பு என்பது சிலருக்கு தெரியவில்லை, சிலருக்கு புரிவதில்லை. இதையெல்லாம் இந்த படத்தில் எப்படி அட்ரஸ் பண்ணிருப்பாங்க என்ற எதிர்பார்ப்பை ட்ரைலர் தூண்டுகிறது.
இன்றைய தலைமுறைக்கு தேவையான அவசியமான கருத்தும்கூட.. தடம் பதிக்கும்.. அடுத்த தலைமுறையை காக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு பகாசூரன் ஒரு எச்சரிக்கை மற்றும் வரப்பிரசாதம் என்றெல்லாம் சொல்கின்றனர் ரசிகர்கள். செல்வராகவன் மற்றும் நாட்டின் நடிப்பு பிரமாதம். கணிப்பாக ஒரு சில மக்களால் இந்த படத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
Video: