சூர்யாவை தூக்கிட்டு பாலா எடுக்கப்போகும் வணங்கான்.. ப்பா செம்மா மாஸ் ஹீரோவ போயிருக்காரு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
பாலா சேதி வெளியிட்ட ஒரு மணிநேரத்தில், பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்என்று அறிவித்திருக்கிறார்கள். இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த வணங்கான் கைவிடப்பட்டது குறித்து இரண்டு தரப்பும் முறைப்படி அறிவித்திருக்கின்றனர். சம்பிரதாய சொற்களைக் கடந்து உணர்வுப்பூர்வமாக அறிக்கை விட்டிருப்பதாகவே கருதுகிறோம்.
பாலா மீது பல பேருக்கு சினிமாவிலேயே வன்மம் இருக்கும் போல. பாலா ஒருமுறை வருடம் சான்ஸ் கேட்டு போன retired IAS அதிகாரியை தாயோ* என்று திட்டியதாக ஒரு வீடியோ பரவியது. அதை பார்த்து பல பேர் பாலாவை கழுவி ஊத்தினர். ஒரு IAS ஆபீசர் பாலா எப்படிப்பட்ட டைரக்டர் அவரோட கேரக்டர் என்னன்னு கொஞ்சம் கூட தெரிஞ்சுக்காம தான் அங்க போய்.இவரே நேரடியா சான்ஸ் கேட்டு நின்னாராம். நம்புற மாதிரியா இருக்கு பாவா செல்லதுரை சார் என்று விமர்சனமும் இருந்து வருகிறது.
ஒருவரின் வீழ்ச்சியில் அவருக்கு பெரிதும் தொடர்பில்லாதவர்கள் விதைக்கும் வன்மமும், வெறுப்பும் அவர்களை அடையாளப்படுத்துவதாகவே கருதுகிறோம். பகடி வேறு வன்மமும், வெறுப்பும் வேறு. இவை இரண்டும் விதைகள். உள்ளுக்குள்ளேயே முளைத்துக் கிளைக்கும். ஒருகட்டத்தில் அறுவடை செய்வதும் அவரவரே. தற்போது பாலா அவர் எடுக்கும் வணங்கான் படத்துக்கு அவருடைய ஹீரோவை செலக்ட் செய்து விட்டார்.
தற்போது வணங்கான் படத்தில் வணங்கானா நடிக்கவிருப்பது அருண் விஜய். சூரிய இடத்தில அதர்வா நடிப்பார் என்று சொல்லப்பட்டது ஆனால் அருண்விஜய் நடிக்கிறார். தொடர்ந்து ஹிட்டா கொடுத்துவரும் அருண் விஜய்க்கு இந்த படமும் ஒரு ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். கண்டிப்பா மீண்டும் இந்த படம் ‘நடிகர்’ அருண் விஜய்யை வெளியில் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.