விக்ரம், K G F, கைதி எல்லாரையும் ஒரே செகண்ட்ல காலி பண்ணிட்டாரு பாலையா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Balaiyaa atrocity video

இப்போ OTT தளம் இருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு தினம் தினம் விருந்து தான். சும்மா கன்டென்ட் அவங்களுக்கு அப்படி கிடைக்குது. இந்த படம் நல்லா இல்லையா வேற படம் என்று பார்த்துட்டு போயிட்டே இருப்பாங்க. அதுமட்டுமல்லாமல் எந்த படத்தை திரையரங்கில் பார்க்கலாம் எந்த படத்தை OTTயில் பார்க்கலாம் என்று அவங்களுக்கு நல்லா தெரியும்.

சமீபத்தில் வெளியான படங்களில் ரொம்ப அபார வசூல் என்றால் விஜயின் லியோ தான். கூட வந்த படங்கள் பாலையாவின் பகவந்த் கேசரி, ரவி தேஜா நடிச்ச டைகர் நாகேஸ்வர ராவ் போன்ற படங்கள் ரொம்ப சுமாரான வசூலையே பெற்றது. மேலும், தெலுங்கு ஸ்டேட்டில் கூட ரவி தேஜா படத்தை விட தளபதியின் லியோ தான் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Balaiyaa atrocity video

தற்போது இந்த எல்லா படங்களும் OTTயில் ரிலீஸ் ஆயிடுச்சு. என்னதான் லியோ படத்தை திரையரங்கில் நிறைய பேர் பார்த்தாலும் எல்லாரும் OTT ரிலீசுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. மிகப்பெரிய வரவேற்பு. அதேபோல பாலையா படமும் தமிழில் டப் ஆகி ரிலீஸ் ஆகியிருக்கு. சும்மாவே பாலைய்யா படம் என்றா ஸ்டாண்ட் காட்சிகள் எல்லாம் வேற மாதிரி இருக்கும்.

அவரை தவிர வேறு யாரு நடிச்சாலும் அந்த படம் ஊத்திக்கும் அந்தளவுக்கு இருக்கும். லாரி எல்லாம் பாராது வரும், அதுபோல காட்சிகள் எல்லாம் வெச்சிருக்காங்க. ஆந்திரா ரசிகர்கள் பாலையாவிடம் எதிர்பார்ப்பது அது தான். ஆனாலும் விக்ரம் கைதி போன்ற படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு சீன் இந்த படத்தில் வைத்தது தான் ஆச்சார்யம்.

நீங்களே பாருங்க அட்டுழியத்தை:

Related Posts

View all