பாலைய்யா செஞ்ச சில்மிஷம்..? தெலுங்கு சினிமாவை கழுவி ஊற்றிய ராதிகா ஆப்டே.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Balayya radhika video viral](/images/2024/02/17/radhika-apte-about-tollywood-2-.jpg)
தமிழ்நாடு அளவுக்கு ஆந்திரா தெலுங்கானா எல்லாம் அவ்வளவு progressive கிடையாது. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்வு எல்லாம் ஏற்படுத்திற்று இருக்காங்க. எப்போதுமே caste pride அவங்க கிட்ட இருக்கும், ஆணாதிக்க உலகமாகத்தான் இன்னும் அங்க பல ஏரியாக்கள் இருக்கு. அது அவங்களுக்கு பெருமை வேற.
அப்படி இருக்கும்போது அவங்களோட சினிமா எப்படி இருக்கும். அதுவும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலைய்யாவே அப்படி இருந்தால் என்ன பண்றது? ஆனால் அவங்க குறிப்பிட்டது பாலகிருஷ்ணாவை தானா என்று சரியாக தெரியவில்லை, ஆனால் கமெண்ட் முழுவதும் அவருடைய பெயர் தான் அடிபட்டு இருக்கிறது.
![Balayya radhika video viral](/images/2024/02/17/radhika-apte-about-tollywood-1-.jpg)
நடிகை ராதிகா ஆப்டே எல்லாம் ரொம்ப progressive லேடி, அவங்களோட கடுமையான உழைப்பினால், நடிப்பு திறமையினால் மட்டுமே இவ்வளவு தூரம் உயர்ந்து நிற்கிறாங்க. அப்படி அவங்க கூட நடிக்கும் பொழுது இந்த ஆணாதிக்க விஷயங்கள் எல்லாம் பண்ணினால் அவங்களுக்கு எப்படி இருக்கும், அதை அவங்க ஒரு நேர்காணலில் பளிச் என்று சொல்லிட்டாங்க.
அது பழைய வீடியோவா இருந்தால் கூட அது இப்போ தான் ட்ரெண்ட் ஆவுது. இன்னமும் ஒரு சிலர் ராதிகாவை தான் திட்டுறாங்க அவங்க எப்படி சொல்லலாம் என்று, அந்த நடிகர் செய்தது தவறு என்று சொல்லவில்லை. அந்த வீடியோ வைரல்.
Video:
#RadhikaApte about TELUGU Industry 😳😳😳😳 pic.twitter.com/YFLRroAvHX
— GetsCinema (@GetsCinema) February 16, 2024