யோவ் உனக்கும் எனக்கும் உள்ள பழக்கம் ஒரு படம் தானா... நெல்சனை திட்டிய விஜய்.. வீடியோ வைரல்..
ஜெயிலர் படம் எவ்வளவு நன்றாக போகிறதோ அவ்வளவு ஏக்கம் வைகை ரசிகர்களுக்கு, நம்மாள வெச்சு எடுத்த படம் மட்டும் ஒழுங்கா போகவில்லை என்று. அதனால் இயக்குனர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதுதான் ஆடியோ லான்ச் விழாவில் நெல்சன் அவரை சுற்றியிருந்த நெகட்டிவிட்டி பற்றி சொன்னாரு.
சூப்பர்ஸ்டார் ரஜினியே பீஸ்ட் படத்தின் வசூல் பற்றி ரொம்ப பெருமையா சொன்னாரு. படம் mixed விமர்சனங்கள் தான் ஆனால் விஜய் stardom காரணமாக அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதற்கு பின்னர் ஐவரும் ஜெயிலர் பட ஷூட்டிங் போகிட்டாரு, விஜய் நெல்சன் என்ன பேசிருப்பாங்க என்று யாருக்கும் தெரியவில்லை..
ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி, இப்போது நெல்சன் தொடர்ந்து நிறைய நேர்காணல் எல்லாம் கொடுத்துட்டு இருக்காரு. அப்போது விஜயுடன் உறவு அவருக்கு எப்படிப்பட்ட உறவு என்று வெளிப்படையாக கூறியுள்ளார். நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததை பார்த்து நெல்சன் விஜயிடம் என்மேல எதாவது கோபமா சார் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு விஜய் “யோவ்” என்று சொல்லிட்டு போய்ட்டாராம். பின்னர் திரும்ப கால் செய்து உனக்கும் எனக்குமான உறவு ஒரு படம் தானா. இந்த படம் நல்லா போகலையென்றால் அடுத்த படம் நல்லா பண்ணுவோம் இதுல என்ன இருக்கு என்று தட்டி கொடுத்திருக்காரு. மேலும், ஜெயிலர் படம் முழுவதும் நன்றாக வர வேண்டும் என்று ரொம்ப பாசிட்டிவ் சப்போர்ட் கொடுத்ததே விஜய் தான் என்று அவரே சொல்லிருக்காரு.
இப்போ அந்த வீடியோ:
. Thalapathy @actorvijay reaction to @Nelsondilpkumar After #Beast Release ❤ pic.twitter.com/wUkgtVqkN4
— . 🕊🇮🇳 (@DkVijay622) August 12, 2023