இப்படி படம் எடுத்தா எப்படி பாக்குறது.. வித்தியாசமா எடுக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா.. பிகினிங் வீடியோ வைரல்.
ஒத்த செருப்பு ஒரே ஆள்னாலும் பிசிறே இல்லாத மேக்கிங். முழு கவனத்தோட படம் பாத்தா தா புரியும்.பொறுமையா பாக்கனும். நிச்சயம் வித்தியாசமான முயற்சி. பார்த்திபன் என்றாலே வித்தியாசம் என்ற சிக்னேச்சர் தந்த அழுத்தத்தால் அவர் செய்த தவறுதான் குடைக்குள் மழை என்கிறார். அப்படியென்றால், இரவின் நிழல்?
சமீபத்தில் பார்த்திபன் ஒரு படம் கட் இல்லாமல் எடுத்தார். மிக வித்தியாசமான படைப்பு. தொழில்நுட்பத்தையும் கலையையும் மிக சிறப்பாக பின்னி இருக்கிறார்கள். படம் முழுக்க 96 நிமிடமும் Single Takeஇல் எடுக்கப்பட்டுள்ளது. இது ரொம்பவும் கடினமான முயற்சி என்பதை நீங்கள் இப்படத்தை பார்த்தால் தெரியும். அவ்வளவு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட படம் தான் இந்த “Beginning” படம் என்று நினைக்கிறோம்.
இப்போ என்னடான்னா ஒரு இயக்குனர் ஸ்ப்ளிட் screen ல படம் எடுத்திருக்காரு. இவ்வளவு வித்தியாசமா படம் எடுப்பதற்கு பதிலா நல்ல கதையை வைத்து எடுத்தால் படம் நல்லாவாச்சும் ஓடும்ல. இந்த மாதிரி படங்கள் எல்லாம் OTTக்கு ஓகே. ஆனால் திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று எடுத்துவிட்டு படம் பார்க்கும் மக்களை ஏமாற்ற வேண்டாம். படம் பார்க்க வருவதே என்டேர்டைன்மெண்ட்காக தான்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. படம் நல்லா இருந்து அந்த மனுசனுக்கு ஒரு லாபம் சம்பாதிச்சு கொடுத்தா கொஞ்சம் நன்றாக இருக்கும். மீண்டும் வித்தியாசமாக எடுக்கிறோம் என்று அவரை சிக்கலில் சிக்கிவிட வேண்டாம். சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்த மனிதர்களில் அவரும் ஒருவர்.
Video: