பாரதிராஜா மட்டும் இல்ல.. அவர் மகனும் ஹீரோயின் choose பண்றதுல்ல கில்லி.. ரக்சனா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Bharathiraja margali thingal update

இயக்குனர் பாரதிராஜா என்றாலே அனைவர்க்கும் நினைவுக்கு வரும் முதல் படம், #45YearsOf16Vayathinile 🔥16வயதினிலே🔥 தமிழ் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்த படம் தயாரிப்பு -SA.ராஜ்கண்ணு இயக்கம்-பாரதிராஜா இசை- இளையராஜா வசனம் -கலைமணி ஒளிப்பதிவு- PS.நிவாஸ்.

அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் கிராமத்தை சுற்றியே இருக்கும் படங்கள், அங்கு நாடாகும் பிரச்சனைகள், காதல் எல்லாம் வைத்து தான் படமே எடுப்பார். இப்போது அவருடைய மகன் மனோஜ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஹீரோ/ஹீரோயின் புதுமுகம். ஹீரோ பெயர் ஷியாம் செல்வன், ஹீரோயின் ரக்சனா.

Bharathiraja margali thingal update

இந்த படத்துக்கு டைட்டில் மார்கழி திங்கள் என்று வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இனிதே இன்று துவங்கியுள்ளது. இவ்வளவு காலம் இயக்குனராக சாதித்த பாரதிராஜா சமீப காலமாய் நடிகராகவும் சாதித்து வருகிறார். இவர் இப்போது அவர் மகன் இயக்கும் படத்திலும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்.

மனோஜை திரையுலகில் நிறைய பேருக்கு தெரியும் ஏனென்றால் அவர் முதலாக அவதாரம் எடுத்ததே நடிகராக தான். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்துள்ளார், சில படங்களும் பெரிய ஹிட். பின்னர் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக எல்லாம் பணியாற்றியுள்ளார் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அந்த அனுபவத்தை எல்லாம் வைத்து இப்போ கதை பண்ணி, இயக்குனர் அவதாரம்.

Latest Photo:

Related Posts

View all