தபுக்காக மட்டும் தான் பாக்கிறோம்.. என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க கைதி படத்தை. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டது. டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் திரையிட தேர்வானது அந்த சமயத்தில்.
#கைதி படத்துல ஒரு இடத்தில கார்த்தி சொன்ன வசனம்தான் நியாபகம் வருது 👇👇 கடவுளை நோக்கி கும்பிட்டு விட்டு, விபூதி குடுப்பாரு, அதுக்கு கூட இருக்கவன் - கடவுள்மேலலாம் நம்பிக்கை இல்லனே.. கார்த்தி - நம்பிக்கை வரும்..😍❤
இது போன்ற தரமான வசனங்களை எல்லாம் உள்ளடக்கிய படம் கைதி. இந்த படத்தின் 2ம் பாகத்திற்காக ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கிறார்கள். அப்படி பட்ட படத்தில் கை வைத்துள்ளது பாலிவுட். அதை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அஜய் தேவ்கான் இயக்கி கைதியாக நடித்துள்ளார். அந்த படத்தின் ட்ரைலர் தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது, அது தான் ஆகியுள்ளது.
கைதி படத்தில் என்ன தேவையோ அதுமட்டும் தான் இருக்கும், ஆனால் இந்த படம் கைதி மாதிரியே தெரியல என்னென்னமோ பண்றாங்க படத்தில். அதுமட்டுமில்லாமல் வில்லனாக அபிஷேக் பச்சன் போல, இரும்பு கையோட சுத்திட்டு இருக்காரு. கைதி படத்தோட கரு மட்டும் தான் எடுத்திருக்காரு போல, மாதத்து எல்லாம் பாலிவுட் மசாலா தான். நீங்களே பாருங்க உங்க கருத்தை சொல்லுங்க.
வீடியோ: