அடேய் பாலிவுட். என்னடா கைதி படத்தை ரீமேக் பண்ண சொன்னா அகண்டா படத்தை பண்ணிருக்காங்க. போலா வீடியோ வைரல்.

Bholaa video teaser

கார்த்தி நறுக்குன்னு 5 படம் நடிச்சிருக்காப்ல. (அது தவிரவும் உண்டு. ஆனால் இவை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் காப்பாற்றியவை. நல்ல வெரைட்டியும்)

1.பருத்தி வீரன் 2.மெட்ராஸ்

  1. தீரன் அதிகாரம் 1 4.கைதி 5.பொன்னியின் செல்வன்-1 அதில் கைதி படத்துக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. டார்க்ல வந்த ஒரு சில படங்களில் இது முக்கியமான படம்.

கைதி படம் மஸ்ட் வாட்ச் படம். சிவ பக்தனாக கார்த்தி வலம் வருவாரு. ஒவ்வோரு சண்டை காட்சி முன்பும் விபூதி எடுத்து நெத்தில பூசிகிட்டு,வேட்டிய மடிச்சு கட்டி இறங்குற தோரணை தியேடர்ல விசில் பறக்குது. தேவாரம் பாடுவார் கார்த்தி. இதே போல காட்சிகள் வைத்து அஜய் தேவ்கான் இந்த கைதியை போலா என்ற பெயரில் ரீமேக் பண்ணிருக்காரு, நேற்று ட்ரைலர் ரிலீஸ் ஆகியிருக்கு.

Bholaa video teaser

ட்ரைலர் ரிலீஸ் ஆனதுல இருந்து என்னடா கைதி படத்தை சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்கே என்று தமிழ் ரசிகர்கள் ஹிந்தி காரர்களை கிண்டல் செய்து வருகின்றனர். போலா என்ற டைட்டில் போடும்போதே திரிசூலம் எல்லாம் வருகிறது, அதை மட்டும் யாராவது கிட்ட இது எந்த தமிழ் படத்தோட ரீமேக் என்று கேட்டல் மூக்குத்தி அம்மன் என்று தான் சொல்வாங்க. கைதியை ரீமேக் செஞ்சுட்டு வேற என்னமோ ட்ரை பண்ணிருக்காங்க.

இதில் தபு கதாபாத்திரம் எல்லாம் இருக்கு. அவங்க என்னவா வரப்போறாங்க என்பது எல்லாம் surprise. மேலும் கைதி படத்தில் நம்ம attention பெற்றதே அந்த லாரி தான். இதுல என்னமோ கார் யூஸ் பண்றாங்க. ஒன்னும் புரியல. இது எல்லாம் பார்த்துட்டு தான் நம்ம பசங்களுக்கு டவுட் வந்திடுச்சு இது எந்த படத்தோட ரீமேக் என்று. நீங்களே பாருங்க.

Video:

Related Posts

View all