கடந்த 6 big boss களில் இல்லாத ஒன்று.... பவா... 🔥🔥 இவரை வெளிய அனுப்பிடாதீங்க டா.. வீடியோ வைரல்.

Bigg boss video viral

Must Read - படித்ததில் பிடித்தது:

கதை சொல்லி பவா செல்லத்துரை அவர்களுக்கு Bigg Boss Tamil 7 பொருத்தமில்லா மேடை என சில பல அங்கலாய்ப்புகளை பார்க்க முடிகிறது!

இதனை ஒரு வாய்ப்பாக கருதியோ அல்லது ஏதோ ஓர் அவசியத்தின் பொருட்டோதானே #BavaSelladurai உள்ளே வந்திருப்பார். யோசிக்காமல இருந்திருப்பார். இதில் நடக்கும் நல்லதும் கேட்டதுக்கும் அவரே தான் பொறுப்பு என உணராமலா உள்ளே சென்றிருப்பார்?

சொல்லப்போனால் #Bava யார் என்றே தெரியாதவர்கள் வெகுஜன மக்கள் அநேகம்.. இப்போது பரவலாக #BiggBoss7Tamil வழியாக சென்றடைவார். அந்த ரீச் அவருக்கும் தேவையானதாக இருக்கும்.

Bigg boss video viral

உதாரணத்திற்கு எழுத்தாளர் ஆதவன் எழுதிய ‘ஓட்டம்’ என்கிற சிறுகதையை உணர்ச்சிகரமாக விவரித்தார் பவா. போட்டியாளர்களைப் போலவே பார்வையாளர்களுக்கும் அந்தக் கதையும் பவாவின் விவரிப்பும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இங்கு பலரின் பதிவுகளை காண முடிகிறது

#BiggBossTamil போன்ற, வெகுசனத்தால் பரவலாக கவனிக்கப்படுகிற ஒரு நிகழ்ச்சியின் மூலம் நவீன இலக்கியத்தின் ஒரு துளியாவது மக்களிடம் சென்று சேர்ந்தால் அது நல்லதே.

பணத்திற்காகவும் புகழிற்காகவும் பவா உள்ளே சென்றார் என சொல்கிறார்கள். இருக்கட்டுமே. அதிலென்ன தவறு. கவன ஈர்ப்பிற்கும் அங்கீகாரத்திற்கும், காசுக்கும் ஏக்கம் கொள்வது அல்லது விருப்பப்படுவது மனித இயல்புதான். இலக்கிவாதிகளும் மனிதர்கள்தான்.

பவா வெற்றி பெறட்டும். வாழ்த்துகள்!

இப்போது எல்லோருக்கும் புரியும். Big Boss ஏன் இத்தனை வெற்றிகரமாக நடந்தேறுகிறது என்று உலகம் அறியும். இளைய தலைமுறையோடு இணைந்து செயல்படுவது எத்தனை உற்சாகமானது. கமல் அவர்கள் அதனை திறம்பட வழி நடத்துகிறார். நல்லவை நாம் எடுத்துக் கொள்வோம். பிறனை தவிர்ப்போம்.

Video:

Related Posts

View all