Dolphin மாரி இருக்கீங்க! க்யூட் பொண்ணு பிந்து மாதவியின் லேட்டஸ்ட் கடற்கரை கிளிக்ஸ்! ரசிகர்கள் ஹாப்பி!
![Bindu madhavi new hot](/images/2022/11/20/bindumadhavi.jpeg)
பிந்து மாதவியின் ஹாட் கடற்கரை கிளிக்ஸ்!! பிந்து மாதவி ஒரு மாடல் மற்றும் நடிகை, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரமே அவரது முதல் மாடலிங் அனுபவமாகும். தெலுங்கில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, அவர் தமிழ் சினிமாவிற்கு வந்தார்.
தமிழில் அவர் நடித்த முதல் படம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் வெளிவந்த “வெப்பம்”. நானி, நித்யா மேனன் நடித்த இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் குமாருடன் இணைந்து நடித்திருந்தார். பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிந்து மாதவி.
![Bindu madhavi new hot](/images/2022/11/20/bindu-madhavi-new-hot2.jpeg)
இத்திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதில் இவரது நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது. அதன் பிறகு அவர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் மற்றும் பசங்க 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 5வது இடத்தில் வந்தார் மற்றும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் பெண் வெற்றியாளரானார். செலிபிரிட்டிகள் தங்கள் ரசிகர்களை தொடர்புகொள்ள எப்பொழுதும் பயன்படுத்தும் ஓரே மீடியம் சோசியல் மீடியாவே.
![Bindu madhavi new hot](/images/2022/11/20/bindu-madhavi-new-hot4.jpeg)
![Bindu madhavi new hot](/images/2022/11/20/bindu-madhavi-new-hot66.jpeg)
அதுபோலவே நடிகை பிந்து மாதவியும் தனது புகைப்படங்கள் மற்றும் செய்திகளை சோசியல் மீடியாவில் அப்டேட் செய்து கொண்டே வந்தார்.
தற்போது கடற்கரையில் நடத்தியிருக்கும் போட்ட ஷுட்டிங் செம்ம ஹாட்டாக இருக்கிறார். அவர் அணிந்திருக்கும் ஃபிஷ் கட் உடை அவர் ஸ்லிம் உடலை அழகாக காட்டுகிறது. ரசிகர்கள் லைக்ஸ் குவிக்கின்றனர்.