ரஜினியை பின்னுக்கு தள்ளி சூப்பர் ஸ்டார் பதவியை கைப்பற்றிய விஜய்? கொளுத்திப்போட்ட ப்ளூ சட்டை மாறன். முழு விவரம்.
எந்த மாதிரி கன்டென்ட் எல்லாம் ஆன்லைனில் பகிர்ந்தால், எப்படி மக்கள் கடுமையாக ரியாக்ட் பண்ணுவாங்களா, ரசிகர்கள் அடிச்சுப்பாங்களோ அந்த மாதிரி விஷயங்கள் மட்டும் தான் அவர் டிவெட்டா போடுவாரு. ஏற்கனவே அவர் எப்போதுமே ரஜினியை கடுமையா விமர்சிப்பவர். விஜயோடு ஒப்பிட்டு போடும்போது இன்னும் அது காட்டுத்தீயா பத்திக்கும். இப்போ அது தான் நடந்திருக்கு.
சரத்குமாருக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் போல, அதனால் அவர் எப்போதும் கூறுவது விஜய் தான் தற்போதைய சூப்பர்ஸ்டார் என்று. ஆனால் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். இப்போ விஜய்யை சூப்பர்ஸ்டார் என்று சொல்றாங்க, அடுத்து சிவகார்திஜெயனை சொல்லலாம், அடுத்து துருவ் விக்ரமை சொல்லலாம். சிறுவனாக இருப்பவன் காலப் போக்கில் இளைஞனாக, தந்தையாக, தாத்தாவாக, கொல்லுத் தாத்தாவாக மாறித் தான் ஆக வேண்டும் எப்போதும் சிறுவனாக இருக்க நடிகர்கள் என்ன தெய்வப் பிறவியா?
ஆனால் இந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி மாதிரி சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி தான் அவரோட அந்த ஸ்டைலான நடிப்பு அவரை எப்பவுமே சூப்பர் ஸ்டாரா வச்சிருக்கும். சரத்குமார் சொல்றதால மக்கள் மனசு மாறிவிடாது. அதோடு இளைய தளபதி என்றால் அது விஜய் தான் என்று கொஞ்சம் matured ரஜினி ரசிகர்கள் கருத்து. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், விஜய் தன்னை சூப்பர்ஸ்டார் என்று claim பண்ணியது இல்லை. அவர் எப்போதும் சொல்வது ரஜினி தான் சூப்பர்ஸ்டார் என்று.
ரசிகர்கள் சண்டை இருக்கும் வரை தான் நடிகர்களுக்கு வியாபாரம். அது ரஜினியோ,கமலா, விஜயோ, அஜித்தோ யாரும் கண்டுகொள்வதில்லை. அதை பொருட்டாக எண்ணி இப்படி சண்டை செய்கிறீர்களே என்று அட்ரஸ் செய்வதும் இல்லை. எப்போதுமே இரு துவங்கள் இருந்தே ஆகவேண்டும். அப்போது தான் வாழ்கை சுவரசியா இருக்கும் எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும்.
ரஜினியை பின்னுக்கு தள்ளி சூப்பர் ஸ்டார் பதவியை கைப்பற்றிய விஜய்? pic.twitter.com/UdGq9yMDYS
— Blue Sattai Maran (@tamiltalkies) December 24, 2022