கமலா தியேட்டர்க்கு ப்ளூ சட்டை மாறன் வர்றான்.. ஜெயிலர் படம்.. ரஜினி ரசிகர் வீடியோ வைரல்..
ரஜினி ரசிகர்களுக்கு ப்ளூ சட்டை மாறன் மேல அவ்வளவு காண்டு ஏன்னா எப்போ அவருக்கு கன்டென்ட் கிடைக்கவில்லை என்றாலும் வம்பு இழுப்பது ரஜினியை தான். எதாவது ஒன்னு சொல்லி மட்டம் தட்டிட்டே இருப்பாரு. ஒரு ரசிகனா எல்லாருக்கும் கடுப்பாகத்தான் செய்யும், ஒரு சிலர் கடந்து போய்டுவாங்க. ஒரு சிலர் வன்மத்தை கக்க வெயிட் பண்ணுவாங்க.
அந்த மாதிரி சம்பவம் தான் இப்போ நடந்திருக்கு. நாளைக்கு ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு எப்போவும் போல கொஞ்சம் வாய் விட்டுட்டாரு நம்ம மாறன். பசங்க எல்லாம் உக்கிரமா இருக்க space போட்டு நாளைக்கு மாறன் எந்த திரையரங்குக்கு வர்றார் என்று லீக் செய்து அவரை அடிக்க பிளான் பண்ணிருக்காங்க.
அந்த பசங்க பேசுனதுக்கு மாறன் போட்ட ரிப்ளை: ‘டேய்.. நான் மாயாஜால்னு தெளிவாத்தான சொன்னேன். இப்ப எதுக்கு சம்மந்தமே இல்லாம கமலா தியேட்டர்னு பொய் சொல்லி.. சும்மா இருக்கற பசங்களையும் ரேக்கி விட்டுட்டு இருக்க?
அதாவது நீ கமலா தியேட்டர்ல போய் ‘ப்ளூ சட்டை இங்க வரவே இல்லை. பயந்துட்டான்’னு ட்வீட் போட்டு ஊரை ஏமாத்தத்தான இப்படி ஒரு மொக்கையான ப்ளான் போட்ட?
ஏன்டா இப்படி LKG பசங்க ரேஞ்சுக்கு இருக்கீங்க?’
கிழே ஒரு வீடியோ இணைத்துள்ளோம். அந்த வீடியோக்கு மாறனின் பதில்: @tnpoliceoffl Please take against the person who is making death threat in this audio and also take action against the administrators who are responsible for instigating violence in this twitter space discussion.
@CMOTamilnadu CM Stalin Sir, i hope you will maintain law and order by taking action against the persons who make death threat and the administrators of this twitter space.
‘இந்தமுறை சரியாக ஸ்கெட்ச் போட்டு தூக்கனும் கிங்ஸ்லீ. CCTV இருந்தாலும் பயப்பட கூடாது’ என பேசிய நபரை உடனே கைது செய்ய வேண்டும். இதர நபர்களையும் வன்முறைக்கு தூண்டி விடுகிறார்.
Video: