பிறந்தநாள் பரிசு இவரை இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. பாபி சிம்ஹா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படம் வால்டர் வீரய்யா. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இது சிரஞ்சீவியின் பான் இந்தியா படம். நமக்கு பிடித்த பழைய சூப்பர்ஸ்டார்கள் இன்னும் படம் நடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் அவர்கள் வயசுக்கு இவ்வளவு energetic ஆக துறு துறுவென்று இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தில் மற்ற மொழிகளை சேர்ந்த பெரிய ஸ்டார்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அப்படி தமிழில் இருந்து நடிக்கும் ஸ்டார் நம்ம பாபி சிம்ஹா, இவர் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. சாலமன் சீசர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண்டிப்பாக வில்லன் ரோலாக தான் இருக்கும். சிரஞ்சீவிக்கு வில்லன் என்பது தமிழில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பது போன்று, ரொம்ப பெருமையான விஷயம். தெலுங்கு மெகாஸ்டாரே சிரஞ்சீவி தான். போன வாரம் இந்த படத்திற்கான டீசர் வெளியானது முதல், படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பாபி சிம்ஹாவும் விஜய் சேதுபதி போன்று versatile நடிகர் தான். இவருக்கு இவர் முகத்திற்கு எல்லா விதமான கதாபாத்திரமும் சூட் ஆகும். கடைசியாக மகான் படத்தில் பல வித தோற்றங்களில் அதாவது சுறுப்பான இளைஞன் முதல் வயதான காதபடிஹரம் அவரை எல்லா பரிமாணங்களையும் கச்சிதமாக காட்டினார். அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்தார் என்றே கூறலாம். இந்த படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் என்றால், கண்டிப்பாக பெரிய ரோலாக தான் இருக்கும்.
இந்த படம் சிரஞ்சீவிக்கும் ரொம்ப முக்கியமான படம். அவர் சமீபத்தில் கொடுத்த ஹிட் எல்லாமே ரீமேக் படங்களில் தான், ஒரு காலத்தில் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுத்த வந்த மெகா ஸ்டாருக்கு இந்த நிலைமை. இந்த படம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம்.
Video: