புர்கானால அவ்ளோ பிரச்னை போய்ட்டு இருக்கு.. அதை வெச்சு ஒரு காதல் படம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இஸ்லாமிய பெண்கள் புர்கா அணியக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை; கர்நாடக பாஜக அரசும் சொல்லவில்லை; மத்திய அரசும் சொல்லவில்லை; புர்கா அணிந்த பல பெண்கள் பாஜக சார்பாக தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகாவில் ஒரு அரசு உதவி பெரும் பள்ளியில் யூனிபார்ம் அணிந்து வந்த மாணவிகள் திடீரென்று ஒட்டுமொத்தமாக புர்கா அணிந்துவந்தனர் உடனே ஹிந்து மாணவர்கள் காவி டவல் அணிய ஆரம்பித்தனர் இதுதான் பிரச்னை.பாஜக விற்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை, பிரச்னை நீதிமன்றத்தில் இருந்து கொஞ்ச நாள் கழித்து முடித்துவைக்கப்பட்டது.
கர்நாடகாவில் நடந்த அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. சாதி, மதம் தாண்டி பள்ளியில், கல்லூரியில் தான் பசங்க பொண்ணுக என்று ஜாலியாக இருக்கும் வயது. அப்படிப்பட்ட காலேஜ்க்குள் மத பிரச்னை எப்படி வந்தது என்று தான் இதுவரை தெரியவில்லை. ஆனால் யாரோ தூண்டுதலின் பேரில் நடந்திருக்கிறது.
இப்போ ஏன் அதை பேசுறீங்க என்று கேட்கறீங்களா, அதை வைத்து ஒரு படமே வந்திருக்காது. அதுவும் காதல் படம். இந்த படம் ஏற்கனவே நிறைய அவ்விருதுகள் வாங்கிய படம் என்று சொல்றாங்க. ஹிந்து பையன் மேல் காதல் அந்த பெண்ணிற்கு வருதா இல்லையா என்ன ஆகப்போகிறது என்பது தான் கிளைமாக்ஸ். இந்த படகுக்கு ஒரு குரூப் சூப்பரா விளம்பரம் தேடிக்கொடுக்கும்.
Video: