சந்திரமுகி 2 ஹீரோயின் நாங்க சொன்ன மாதிரியே அவங்க தான். செம்ம காட்டு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமா அடுத்த வருடம் எதிர்பார்க்கும் படங்களில் சாந்திரமுகி படமும் முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் அந்த டைட்டில்காகவே. 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம் எவ்வளவு பெரிய வசூல் அள்ளியது என்று அனைவர்க்கும் தெரியும். சூப்பர்ஸ்டாருக்கே மிகப்பெரிய comeback ஆக அமைந்தது. நான் யானை இல்லடா குதிரை, விழுந்தா டக்குன்னு எந்திருச்சுருவேன் என்று சொல்லி அடித்தார் சும்மா கில்லி மாதிரி.
அந்த படம் வந்த ஒரு சில ஆண்டுகளுக்கு அப்புறம், தமிழ் சினிமா உலகில் ஒரு டாக் இருந்துச்சு. ரஜினி சந்திரமுகி இரண்டாவது பார்ட் கதை ரெடி பண்ண சொல்லிருக்காரு, அந்த வேலைகள் போயிட்டு இருக்குன்னு. ஆனால் அப்போது நடக்கவில்லை. ரஜினி எந்திரன் படத்தில் செம்ம பிசி ஆயிட்டாரு, அதற்குப்பின் எந்திரன் 2, காலா, கபாலி அப்டின்னு 17 வருடம் போய்டுச்சு. இப்போது 2022ம் ஆண்டு லாரன்ஸ் அந்த படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. ரஜினியின் ஆசியுடன் துவங்கப்பட்டது.
சந்திரமுகி படம் என்றாலே அந்த படத்தில் ஹீரோவை விட ஹீரோயின்னுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஜோதிகா அப்போது பண்ணினார், பல விருதுகளை வென்றார். சும்மா ஒரு ஹீரோஇன்னை எடுத்து போட்டால் ஜோதிகா அளவுக்கு perform பண்ணவில்லை என்ற குற்றச்சாட்டு வரும். ஜோதிகாவை விட செம்மயா நடிக்கும் ஒரு ஹீரோயின் தான் இந்த படத்தின் கதாநாயகி. அவங்க யார் என்றால் பாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் கங்கனா ரணாவத்.
கங்கனா நடிக்கும் எல்லாம் படங்களும் இப்போது female சென்ட்ரிக் படம் தான். இவங்களை சந்திரமுகியா நடிக்க வாய்ப்பளித்த வாசுக்கு நன்றி. இவங்க சமீபத்தில் தலைவி படத்தில் எப்படி தெறிக்க விட்டாங்க என்பது உலகு அறியும். எப்போவுமே வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவருக்கு இந்த படம் செம்ம வாய்ப்பா இருக்கும் perform பண்ண. அதிகாரபூர்வ அறிவிப்புக்காக வைட்டிங்.