நாங்க சொன்ன மாதிரியே சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியா நடிப்பது அந்த நடிகை தான். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Chandramukhi 2 heroine update

ஜோதிகா நடிப்பு,வடிவேல் காமெடி சந்திரமுகி ரொம்பவே சாதாரண ஒரு கதை தான் ஆனா அமானுஷ்யம் நிறைந்த திகில் படம் மாதிரி திரைக்கதை, வசனங்கள் பண்ணி இருப்பார் வாசு இதெல்லாம் சேர்ந்து தான் ரஜினிக்கு ஒரு வெற்றி படமா சந்திரமுகி. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஒரு வெற்றி கட்டாயமாக தேவைப்பட்டது. அப்போது வந்து 800 நாட்கள் ஓடிய படம் சந்திரமுகி.

பாபா தோல்விக்கு பின் ரஜினி அவ்வளவு தான் என்று சொல்லியவர்களுக்கு தரமான பதிலடி அந்த படம் மூலம் கொடுத்தாரு. மேலும் இன்னும் அந்த குதிரை ஓடிட்டு தான் இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது. அது எல்லாம் ஒருபுறம் இருக்க, சந்திரமுகி 2 அப்போவே ரஜினி பண்ணுவதாக ஒரு பேச்சு இருந்தது. ஆனால் பண்ணவில்லை. தற்போது பி.வாசு சந்திரமுகி 2ம் பாகத்தை ராகவா லாரன்ஸை வைத்து எடுத்து வருகிறார்.

Chandramukhi 2 heroine update

இந்த படத்தில் சந்திரமுகியாக யார் நடிப்பாங்க என்ற கேள்வி தான் எல்லாருக்கும். ஜோதிகாக்கு equal அல்லது அவரை விட மிகச்சிறந்த நடிகையால் மட்டுமே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக முடியும். யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துகொண்டு இருந்தது. நாங்கள் ஏற்கனவே ரிப்போர்ட் செய்தபடி. சந்திரமுகியாக நடிக்க இருப்பவர் கங்கனா ரணாவத் தான். அந்த கதாபாத்திரத்தை இப்போ இருக்கும் நடிகைகளில் இவரால் மட்டுமே justify பண்ண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு சிம்ரனை தான் அணுகியுள்ளனர், ஆனால் பல்வேறு படங்கள் டேட்ஸ் காரணமாக ஜோதிகா நடித்தார். ஜோதிகா நடிப்பில் மாஸ் காட்டினார் என்றால் இன்னும் அந்த படத்தை சொல்லலாம். அந்த விழி, அந்த பார்வை, அந்த வசனம் டெலிவரி எல்லாம் வேற லெவெலில் இருக்கும். கங்கனா இந்த கதாபாத்திரத்தை எப்படி பண்ணுவாங்க என்று நினைத்து பார்த்தாலே படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று இருக்கிறது.

Related Posts

View all