கங்கனா மேலே இருந்து கண்ணே எடுக்க முடியல... அப்படி இருக்காங்க.. சந்திரமுகி-2 ட்ரைலர் வீடியோ வைரல்.
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதை முன்னிட்டு படத்தின் ட்ரைலர் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. இன்னும் இரண்டு வாரம் மட்டுமே ரிலீசுக்கு இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் எல்லாம் முழு வீச்சில் போகும். இந்த படத்துக்கு இதுவரை பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் வரவில்லை.
இசை வெளியீட்டு விழாவில் நடந்த நிகழ்வுகள், பின்னர் அங்கு நடந்த சண்டை சர்ச்சை போன்றவை கூட பெரிதாக லைம் லைட்டுக்கு வரவில்லை என்று தான் தோன்றுகிறது. அது விஜய் அல்லது ரஜினி ஆடியோ லான்ச் விழாவில் நடந்திருந்தா இன்னும் பேசுபொருளாக இருந்திருக்கும். இன்னைக்கு ரிலீஸ் ஆகும் ட்ரைலர் தான் இந்த படத்துக்கு போலாமா வேண்டாமா என்ற நம்பிக்கை கொடுக்கும் என்ற நிலை இருந்தது, அந்த வகையில் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கிறது.
இந்த படத்துடன் மார்க் ஆண்டனி படம் ரிலீஸ் ஆகிறது, அந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கு. SJ சூரியா, விஷால் காம்போ. முன்பு ரிலீசான டீசர் கூட செம்ம ஹிட்டு. இளைஞர்கள் பட்டாளம் எல்லாம் இந்த படகுக்கு போக நிறைய வாய்ப்பு இருக்கு முதல் நாளில். சந்திரமுகி 2 நல்லா இருந்தால் மட்டுமே கூட்டம் வரும்.
இயக்குனர் பி.வாசு இந்த வயதிலும் நல்லா உழைச்சிருக்காரு. பெருசா வடிவேலு காமெடிய எல்லாம் முதல் பாகத்தில் ஒர்கவுட் ஆன மாதிரி இதில் ஆகும்ன்னு சொல்ல முடியாது. அப்படி தான் இருக்கு. கங்கனா செம்மயா இருக்காங்க, லாரன்சுக்கு பேய் படம்னாலே இறங்கி அடிப்பாரு நடிச்சிருக்காரு. மற்றபடி என்டேர்டைனிங்கா இருக்கு. இசை மிரட்டல்.
வீடியோ: