காயத்ரி பக்கத்தில் இருக்கிற பொண்ணு யாருன்னு தெரியுதா? செம்ம ஹாட். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Charlie next udanpaal latest photo

திரையில் இதுபோல் இயல்பான பெண்ணைப் பார்த்து நாட்களாகி விட்டது. ‘ஜெயில்’ படத்தில் துடுக்குத்தனமான பேச்சு மற்றும் நடிப்பில் அசத்திய அபர்னதிக்கு வாழ்த்துகள். ‘தேன்’ மூலம் திரைக்கு வந்து, ‘ஜெயில்’ மூலம் ரசிகர்களின் இதயங்களை சிறைபிடித்த பாசமிகு திரை மகள் அபர்னதி இப்போது மீண்டும் உடம்பால் என்ற படம் மூலம் நம் மனதை கொள்ளையடிக்க வர்றாங்க.

800 படங்களில் நடித்தபின், பட வாய்ப்பு குறைந்தால் மற்ற நடிகர், இயக்குனர் போல வெறுப்பரசியல் செய்தோ, வெட்டியாகவோ பொழுதை போக்காமல், தன் 60 வயதில், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்ற சார்லி உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். ஆனால் இப்போது மீண்டும் பட வாய்ப்பு அதிகரித்துள்ளது, இப்போது இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் அவ்வளவு இன்டென்ஸ்-ஆக இருக்கிறது.

Charlie next udanpaal latest photo

They are not your regular family, they’re full of surprises! நீங்களே ஆஹா தமிழுக்கு வந்து பாருங்களேன் என்று தான் இந்த படத்தை ப்ரோமோஷன் செய்றாங்க. அப்படி என்ன இருக்கப்போகிறது என்று தெரியவில்லை இந்த படத்தில், ஆனால் இந்த முதல் பார்வை ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கு. தீணா முக்கியமான ரோல் பண்ணிருப்பார் போல. விவேக் பிரசன்னா வதந்திக்கு பின் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்.

இவங்க எல்லாரும் ஒரு குடும்பம், ஆனால் ஒவ்வொருவர் மனதிலும் பணத்தின் ஆசை தான் மேலோங்கி இருக்கும் போல, அதை பற்றி பேசும் படமாக கூட இருக்கலாம். சட்டில வெச்சு சார்லியை எங்க தூக்கிட்டு போறாங்க என்று தெரியவில்லை. ரொம்ப வித்தியாசமா இருக்கு. எப்போவும் வித்தியாசமான முயற்சிக்கு தமிழ் ரசிகர்கள் பாராட்டி தான் பழக்கம். வாழ்த்துக்கள் ‘உடன்பால்’ படக்குழுவினருக்கு.

Related Posts

View all