ரொம்ப மோசம் நீங்க! நடு ரோட்டுல இப்புடிய இப்புடிய கட்டி பிடிப்பாங்க! ஜாலி பண்ணும் செல்லம்மா சீரியல் ஜோடி ஹாட் வீடியோ.
உல்லாசமாக ஊர் சுற்றி வரும் சர்ச்சைக்குரிய ஜோடி அன்ஷிதா மற்றும் அர்னவ் - லேட்டஸ்ட் வீடியோ வைரல். அன்ஷிதா அஞ்சி என்றழைக்கப்படும் அன்ஷிதா அக்பர்ஷா ஒரு இந்திய நடிகை மற்றும் கொல்லத்தைச் சேர்ந்த மாடல் ஆவார், இவர் மலையாள டிவி சீரியல் துறையில் நடித்துவந்தார். அவர் கேரளாவில் உள்ள கொல்லத்தில் பிறந்தார்.
ஜீ கேரளாவில் ஒளிபரப்பான கபானி என்ற மலையாள சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
2019ல் கபானி சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியல் பிரபல தெலுங்கு சீரியலான முத்தால முகுவின் ரீமேக் ஆகும். இந்த நிகழ்ச்சியில் அன்ஷிதா ரம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்., இந்த சீரியல் திறமையான நடிகை கோபிகா அனில் நடித்த கபானி என்ற பெண்ணின் கதையைச் சொல்கிறது. கபானியின் சகோதரியாக அன்ஷிதா நடித்தார். இந்த ஜீ கேரளம் சீரியல் அவரது சின்னத்திரை பிரவேசத்தை பெரும் வெற்றியடைய செய்தது.
அதன்பிறகும் தக்கார்ப்பன் நகைச்சுவை, நகைச்சுவை நட்சத்திரங்கள் மற்றும் நீலமலர் போன்ற பல நிகழ்ச்சிகள் மற்றும் ஆல்பங்களில் அன்ஷிதா தோன்றினார்.
அவர் இப்போது ஏசியாநெட்டில் ஒளிபரப்பாகும் கூடாதே என்ற குடும்ப பொழுதுபோக்கு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஜனவரி 4, 2021 அன்று திரையிடப்பட்டது. அவர் கிருஷ்ண குமார், பிபின் ஜோஸ் மற்றும் ஸ்ரீதன்யா ஆகியோருடன் நடிக்கிறார்.
அதுமட்டுமின்றி தற்போது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் தமிழ் சீரியலான " செல்லம்மா" வில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த சீரியலில் தன்னோடு இணைந்து நடித்து வரும் அர்ணவ்வுடன் கிசுகிசுக்கப்பட்டார். அன்ஷிதா தன் கணவரை மயக்கி தன் வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக அர்ணவின் மனைவி மீடியாவிற்கு பேட்டி அளித்து வந்தார்.
அப்பிரச்சனை பெரும் சர்ச்சையானது. அன்ஷிதாவும் தன் பங்கிற்கு ஒரு சில விளக்கங்களை அளித்திருந்தார்.
அர்னவ் மீது போலிஸ் கேஸ் ஆகி ஜெயில் வரை சென்று திரும்பி வந்திருக்கிறார். தொடர்ந்து அத்தொடரில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். இருவரும் எப்பொழுதும் ஒன்றாக சுற்றித் திரிவதாக கிசுகசுக்கள் வந்து கொண்டே இருக்கும். அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் ஒன்றாக சுற்றிவரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.