அப்டியே தனுஷ் படத்தின் பாட்டை காப்பி அடித்து சில்லா சில்லா பாட்டு போட்ருக்கீங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Chilla chilla video song copies

நேற்று அஜித் ரசிகர்களாக செம்ம விருந்தாக வந்தது துணிவு படத்தின் முதல் சிங்கிள் ‘சில்லா சில்லா’. இந்த பாட்டு ரிலீஸ் ஆனதில் இருந்து இந்த பாட்டு தான் ட்ரெண்டிங்கில் நம்பர் 1. எப்போது விஜய், அஜித் படத்தின் பாடல் வந்தாலும் இதான் நிலைமை. எவ்வளவு கொண்டாட முடியுமோ அவ்வளவு கொண்டாடி தீர்த்துவிடுவாங்க. ஆனால் அஜித் ரசிகர்கள் சிலருக்கு , விஜய் ரசிகர்கள் சிலருக்கு மாற்றுக் கருத்தாக தான் இருக்கும் எப்போதுமே.

ஒரு சில ரசிகர்களை எப்போதுமே திருப்தி செய்யவே முடியாது, அது ஏனென்று தெரியவில்லை. கையில் எல்லாம் விரலும் ஒரே அளவில் இருக்காது அல்லவா அது போல தான் இதுவும். அதேபோல அவங்க பாட்டை இவங்க குறை சொல்வதும், இவங்க பாட்டை அவங்க குறை சொல்வதும் உண்டு. தற்போது இந்த சில்லா சில்லா பாட்டு இந்த தனுஷ் படத்தோட பாட்டின் காபி தான் என்று வீடியோ போட்டிருக்காங்க. அட அது அப்படியே தான் இருக்கு. ஜிப்ரான் வேலையை காட்டிவிட்டார்.

Chilla chilla video song copies

சமீபத்தில் நாங்கள் பார்த்த வியந்த ரசித்த ஒரு ஓபனிங் சாங் என்றால் அது மாஸ்டர் படத்தில் அனிருத் போட்ட ஓபனிங் சாங் தான். ஆனால் மாஸ்டர் படம் வந்து இரண்டு வருடம் ஆகப்போகிறது. இருந்தாலும் வாத்தி கமிங் போல ஒரு பாட்டு அனிருத் நினைத்தால் கூட போடா முடியுமா என்று தெரியவில்லை. “அனிருத் தான் இப்போதைய ட்ரண்ட்க்கு அஜீத் விஜய்க்கு ஏத்த மியூசிக் டைரக்டர். மத்த பூரா பயலுவலும் கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்த தெரியாதவங்கதான் என்ற கருத்தும் இந்த பாடல் வெளியானவுடன் பரவி வருகிறது.

ஒரு சிங்கிள் ரிலீஸ் ஆனதுக்கே இப்படி அடிச்சுக்கிறாங்களே, பட ரிலீஸ் தேதி அறிவிப்பு இருக்கு, டீசர், ட்ரைலர் அறிவிப்பு இருக்கு, படத்தின் ரிலீஸ் வேற இருக்கு. இவர்களை வைத்து நிறைய பேர் நல்ல வியாபாரம் பாத்திடுவாங்க இந்த ஒரு மாதத்தில். இரண்டு படத்துக்கும் பாஸிட்டிவா தான் இருக்கு. இரண்டு படங்களும் நல்லா ஓடினால் தமிழ் சினிமாவிற்கு தான் நல்லது.

Video:

Related Posts

View all