சிரஞ்சீவி செய்த சில்மிஷம்.. வயசுக்கு ஏத்தத பண்ணுங்க சார்.. கீர்த்தி வீடியோ வைரல்.
![Chiranjeevi video viral](/images/2023/08/08/chiranjeevi-keerthy-video-1-.jpg)
எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் இந்த காணொளியை பற்றி, ஏனென்றால் நேற்று முதல் இந்த வீடியோ தான் ட்ரெண்டிங். சமீப காலமாக சிரஞ்சீவி இதுபோன்ற விஷயத்தில் மாட்டி வருகிறார். கடைசியாக இதேபோல் பூஜா ஹெக்டேவிடம் செய்தார் அதுவே பெரிய பேச்சுப்பொருளாக மாறியது ஆனாலும் இன்னும் திருத்தல.
தமிழில் அஜித் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம் அந்த படத்தின் ரீமேக் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி அந்த படம் ரிலீஸ் ஆகிறது. ஆம் தெலுங்கு மாநிலங்களில் இந்த படத்தினால் ஜெயிலர் வசூல் கொஞ்சம் கம்மியாகவே இருக்கும். சிரஞ்சீவி தான் அங்கே சூப்பர்ஸ்டார். அந்த படத்தை தான் முதலில் பார்ப்பாங்க.
![Chiranjeevi video viral](/images/2023/08/08/chiranjeevi-keerthy-video-2-.jpg)
லட்சுமி மேனன் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடிச்சிருக்காங்க, சுருதி ஹாசன் ரோலில் தமன்னா நடிச்சிருக்காங்க. தமன்னா தான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக் என்றால் சிரஞ்சீவி பண்ணிய சில விஷயங்கள் ரசிகர்களிடத்தில் முகத்தை சுளிக்க வைத்துள்ளது. கீர்த்தி கையை பிடித்து தடவது போன்ற வேலைகளை விழாவில் பண்ணியுள்ளார்.
லட்சம் பேரு பார்ப்பாங்க. நம்ம ஸ்டார்ஸ் எல்லாருமே இந்த விஷயத்தில் ரொம்ப டீசண்ட். காமெடிக்காக கூட பொது மேடையில் இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. ஆனால் இது அங்கு பெரிய விஷயம் இல்ல போல. நீங்க இரண்டு பெரும் அண்ணன் தங்கையாக நடிச்சிருக்கீங்க. அதை மறந்துட்டு என்ன பண்ணிட்டு இருக்காங்க பாருங்க.
Video:
Chiranjeevi Attrocities with keerthy pic.twitter.com/tg48Msk0PI
— Kolly Censor (@KollyCensor) August 6, 2023